Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போவது யார் : மறைக்கப்படும் உண்மைகள்

wikiandcoதமிழ்ப் பேசும் மக்களின் இனப்படுகொலையை சிங்கள அதிகாரவர்க்கம் மட்டுமே திட்டமிட்டு நடத்தவில்லை. இன்று தமிழர்களின் மத்தியிலுள்ள புல்லுருவிகளின் இறுக்கமான வலையமைப்புக்களின் ஊடாக இனச் சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என்பது மறுபடி ஒரு முறை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. வெற்று வார்த்தைகள், வெற்றுத் தீர்மானங்கள் ஊடாக மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மக்களை அழித்து கொழுக்கும் கூட்டம் ஒன்று கழுகுகள் போல மக்களைச் சுற்றிவருகிறது.

இவர்களுக்கு எதிரான போராட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாவிட்டால் போலி தேசிய முகமூடி அணிந்த கயவர் கூட்டம் மக்களையும் மண்ணையும் அழித்துத் துவம்சம் செய்துவிடும்.

இலங்கை ஒற்றையாட்சி மாகாண சபையை ஏற்றுகொண்டு ஆட்சி செய்யும் கொள்ளைக் கூட்டத்தின் வரலாற்றுத் ‘துரோகம்’ ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். யாழ்ப்பாண மண் அழித்து கடாந்தரையாக மாறும் நிலை உருவாகும்.

வடமாகாண சபை யாருக்கானது?

சுற்றாடலை கையாளும் ஆபத்தான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் உலக நிறுவனங்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு அந்த மண்ணை அழித்தமை தற்செயலானதல்ல. எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் பெற்றோலியக் நச்சுக் கழிவுகளை அகற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஒரு நிறுவனமாகும். எம்ரிடி வோக்கஸ் இன் தாய் நிறுவனமான எம்ரிடி கப்பிடல் மலேசியாவில் தலைமையகத்தக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்தும் வியாபாரத்தை ஆரம்பித்த நாளிலிருந்து அங்கிருந்து வெளியேறும் எண்ணைக் கழிவை உரிய முறையில் வெளியேற்றமல் மக்கள் குடியிருப்புக்களை நாசப்படுத்தியது. சுன்னாத்திலிருந்து பல மைல் சுற்றாடல் வரை அதிபார டீசல் கழிவுகள் நீரை நஞ்சாக மாற்றியது. நிலத்தின் ஆழத்திலுள்ள சுண்ணாம்புப் படுக்கைகளில் நிரந்தரமாகப் படிந்த டீசல் கழிவுகளால் வளமான நிலம் பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலமாக மாற்றப்பட்டது.

இதற்கு எதிராகக் குரல்கொடுக்கும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகிய எம்.ரி.டி வோக்கஸ் என்ற கிரிமினல் பல்தேசிய நிறுவனம் அவர்களின் வாயை மூடுவதற்கு தேவையானவற்றைச் செய்துகொடுத்தது, பல மில்லியன்கள் டொலர்களில் புரண்டிருக்கலாம் என உள்ளகச் செய்திகள் வெளியாகின.

இயற்கை வளம் அழிந்தது..

சுன்ன்னாகத்திலிருந்து திருனெல்வெலி வரைக்கும் கிணறுகளில் எண்ணைக் கழிவுகள் மிதந்தன. சுத்தமான நீரைப் பருகிவந்த மக்கள் போத்தல் தண்ணீரில் தஞ்சமடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனில் பறை விடுதலைக்கான குரல் என்ற அமைப்பின் போராட்டம் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் முன்னால் நடைபெற்றது. பல்வேறு சுற்றுச் சூழல் குற்றங்களுடன் நேரடித் தொடர்புடையை இலங்கையரான நிர்ஜ் தேவா என்பவர் எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவர்.

பிரித்தானியாவில் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிர்ஜ் தேவா இன்றைய இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர். ரனில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் சிறீலங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே வெளியான சுன்னாகம் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து நிர்ஜ் தேவாவிற்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் வடமகாண அரசு நேற்று(07.12.2015) போலி அறிக்கை ஒன்றை அவசர அவசரமாகத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.

எண்ணை மிதந்த கிணறுகளை வடமாகாண சபை அமைச்சர்கள் பல தடவைகள் நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். ஆய்வறிக்கைகள் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. சுன்னாகம் நீரை மாகாண சபைக்குக் கொண்டு சென்று உறுப்பினர்களைப் பருகச் சொல்லி சமூக ஆர்வலர்களின் குழு ஒன்று கேட்ட போது அவர்கள் அருந்த மறுத்த வரலாறுகளும் உண்டு.

நடந்தது என்ன?

சுன்னாகம் பகுதியையும் சுற்றாடலையும் சேர்ந்த மக்கள் 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தவிர, மருத்துவர் முரளி வல்லிபுரநாதன், துவாரகன் போன்ற சமூக ஆர்வலர்கள் சுன்னாகம் அழிவுகளை மையப்படுத்தி ஆய்வுகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்,

இதனைத் தொடர்ந்து வடமாகாண சபை அவசரமாக ஒரு நிபுணர் குழுவை ஆரம்பித்தது. ஏற்கனவே இலங்கை அரசின் தேசிய நீர்வழங்கல் சபை உட்பட பல்வேறு அமைப்புக்கள் நடத்திய ஆய்வுகளில் நீரில் எண்ணிக் கழிவுகள் கலந்துள்ளன என ஆதாரபூர்வமாகத் தெரிவித்திருந்த போதும் விக்னேஸ்வரனின் ஆசியோடு புதிய நிபுணர் குழு ஒன்று ஆய்விற்காக ஆரம்பிக்கப்பட்டது. இக் குழு கிழக்கு பல்கலைகழக கலாநிதி த.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்கழக இரசாயன வியல் துறைக் கலாநிதி கு.வேலாயுத மூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா உள்ளிட்ட ஒன்பது பேரை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது.

அக்குழுவில் அங்கம் வகிப்பவர்களுக்கும் நீர் பரிசோதனைக்கும் எந்தத்தொடர்ப்பும் இல்லையென்றும் அவர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களின் அடியாட்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி வட மாகாண சபையில் போலி நிபுணர் குழுவின் முதலாவது அறிக்கை வெளியானது, அந்த அறிக்கையின் அடிப்படையில் சுன்னாகம் நீலக்கீழ் நீரில் நஞ்சு கலந்திருக்கவில்லை என, இதுவரை வெளியான ஆய்வுகள் அனைத்தையும் புறக்கணித்து நிபுணர்குழு பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எம்,ரி,டி வோகஸ் என்ற மல்ரி பில்லியன் நிறுவனத்தின் ஊதுகுழல் போன்று செயற்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சாகமடைந்த எம்.ரி.ரி வோக்கஸ் தாம் சுத்தமானவர்கள் என அறிக்கைவிடுத்தது.

2011 ஆம் ஆண்டிலிருந்து வெளியான பல்வேறு ஆய்வு அறிக்கைகளிலும், இலங்கை அரசின் தேசிய நிர் வழங்கல் சபையின் அறிக்கையிலும் நிலக்கீழ் நீரில் எவ்வாறான நச்சுப் பதார்த்தங்கள் கலந்திருக்கின்றன என்ற அறிக்கை வெளியாகியிருந்தன. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற அனைத்து ஆய்வுகளிலும் ஒரெ வகையான முடிவுகளே முன்வைக்கப்படன.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களும் கண்டனங்களும் தொடர்ந்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் கபட நோக்கத்துடன் இலங்கை அரசின் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்களும் கிறீஸ் படிமங்களும் காணப்படுவது உண்மையென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதால் அக்கிணறுகளின் நீரை மக்கள் அருந்த வேண்டாமென நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இக்கழிவு எண்ணெய் மற்றும் கிறீஸ் படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இப்பகுதி கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லையென வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கூறுவதாக கூறப்படுகின்ற நிலையில், அவ்வறிக்கையை நான் கேட்டும் கூட இதுவரைக்கும் தன் கண்ணில் காட்டவில்லையெனவும் குற்றம்சாட்டினார்.

கூடவே பாதிக்கபட்ட மக்களுக்கு எம்.ரி.டி வோகஸ் நிறுவனத்திடமிருந்த இழப்பீடு பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார். வழமை போல அவை காற்றில் பறக்கவிடப்பட எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு கொழும்புத் துறைமுகத்தின் பராமரிப்புப் பணிக்கான பில்லியன்கள் பெறுமதியான ஒப்பந்தம் கடந்தவாரம் இலங்கை அரசால் வழங்கப்பட்டது.

கடந்த ஏப்பிரல் மாதம் இலங்கை அரசின் அந்த அறிக்கையின் பின்னர் வடமாகாண அரசு தனது போலி நிபுணர் குழுவை புதிய ஆய்விற்கு ஆணையிட்டது.
அதன் அறிக்கை நேற்று (07.12.2015) வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சுன்னாகம் நீரில் அதிபார கழிவு டீசல் நச்சுப் பதார்த்தங்கள் இல்லை என முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடி கொடிகளையும் சேர்த்தே சோற்றினுள் புதைத்துள்ளது.

அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பதாக தூய குடி நீருக்கான செலணி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பையும் நிலக்கீழ் நீரில் நஞ்சு கலந்துள்ளமையை ஆதாரபூர்வமாக நிறுவிய எவரையும் அழைக்காது, காதும் காதும் வைத்தது போன்று 07.12.2015 அன்று புதிய அறிக்கையை வடமாகாண் சபை யாழ் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளியிட்டது.

எம்.ரி.டி வோக்கஸ் நடத்திய ஊழித் தாண்டவத்தால் நிலமும் நீரும் மாசடையவில்லை எனக் கூறும் நிபுணர் குழு, மக்கள் நீரை அருந்தலாமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியது எனக் கையை விரித்துள்ளது.

நமது திடீர் தேசிய வாதி விக்னேஸ்வரன், நிபுணர் குழு அறிக்கையெல்லாம் வெளியாவதற்கு முன்பாகவே நீர் நச்சாகியமைக்கு எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் மின்னுற்பத்தி காரணமல்ல்ல என தடாலடியாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அழிப்பதற்கு பச்சைகொடி காட்டிய விக்கியும் குழுவும்…

இன்று வட மாகாண சபையின் அறிக்கையின் அடிப்படையில் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு எதிரான குற்றஙகள் அனைத்தும் பெறுமானமற்றதாக்கபட்டுள்ளன. அந்த நிறுவனம் தேவைப்படும் போது மீண்டும் மின்னுற்பத்தை ஆரம்பித்து வட மாகாணம் முழுவதையும் அழிக்கலாம். இயயற்கையின் கொடையான நீரை அருந்திய மக்கள் இன்று பல்தேசிய நிறுவனங்கள் தயாரிக்கும் இரசாயன போத்தல் நீரைப் பருக நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, போத்தல் நீர் வழங்கும் நிறுவனங்கள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எவ்வகையான ஒப்பந்தங்களை கொண்டுள்ளன என்பது போன்ற செய்திகள் வெளியாகவில்லை.

எழுவருட காலத்திற்கு சமுகவிரோதக் கும்பல்கள் ஒரு பிரதேசத்தையே அழித்துச் சிதைத்துவிட்டு இன்று வல்லூறுகளின் துணையோடு  புனிதப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசு வன்னியில் நடத்திய இனப்படுகொலையின் பின்னர், திட்டமிட்டு சிறுகச் சிறுக நடத்தப்படும் இனப்படுகொலையின் மற்றொரு ஏஜண்டாக வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர் குழாமும் என இந்த வரலாற்றுத் துரோகம் நிறுவியுள்ளது.

நீதிபதியாகவிருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கிய விக்னேஸ்வரனை அரசியலுக்கு அழைத்துவந்தமைக்கான பலனை அவரின் பின்னாலுள்ள அதிகாரவர்க்கம் அனுபவிக்கிறது. மிகவும் நுட்பமான வகையில், தன்னை அரச எதிர்ப்பாளனாகக் காட்டிக்க்கொள்ளும் விக்னேஸ்வரனை அவரின் குருவான பாலியல் சாமி பிரேமானந்தாவின் ஆச்சிரமத்திற்கு மக்கள் அனுப்பிவைப்பார்கள்!

சுன்னாகம் அழிவிற்கான ஆதாரங்கள்

Exit mobile version