Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவின் பிரதமர் கனவு மீண்டும் தகர்ந்தது.

mahinda_beliyathaமகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஊடாகப் போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிரிசேன அனுமதி வழங்கியிருந்த போதிலும் இன்று மீண்டும் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. மகிந்த போட்டியிட்டால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆளுமை மிக்க சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்க போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இதனால் சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை சந்திரிக்காவுடன் அணிசேரும் நிலை தோன்றியது. இதனால் மகிந்தவிற்கான அனுமதியை மைத்திரி நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளரும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜெயந்த மகிந்தவிற்கு வேட்பாளர் அனுமதி வழங்கப்படக் கூடாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மகிந்தவின் ஆதரவாளரான சுசில், மகிந்தவைப் பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.

போர்க்குற்றவாளியும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவை மைத்திரியின் நல்லாட்சி சுதந்திரமாக உலாவவிட்டது மட்டுமன்றி வேட்பாளராகவும் நியமிக்க அனுமதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version