Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கேள்விக்குள்ளாகும் கொரோனா தடுப்பூசி- மரணத்தின் விழிம்பில் இலங்கை மக்கள்

பிரித்தானிய அரசு ஐந்து மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக மொடேர்னா நிறுவனத்துடன் முதல் கட்ட ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டுள்ளது. இத் தடுப்பூசி வெற்றிகரமானதாக முடியுமானால், 2021 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் தடுப்பு மருந்து முழுமையான பாவனைக்கு வரலாம் என பிரித்தானிய அரசு தெரிவிக்கிறது. இலங்கை இந்தியா போன்ற சர்வாதிகார நாடுகளில் தடுப்பு மருந்து தொடர்பான தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இத் தடுப்பு மருந்து உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

தடுப்பு மருந்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு, அதனைப் பெற்றுக்கொள்வதற்கன மனு ஆகியவற்றின் ஊடாகவே அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும், இலங்கை இதுவரையில் ஏனைய நாடுகளைப் போன்று எந்த மருந்து நிறுவனத்தையும் இதுவரை தொடர்புகொள்ளவில்லை.
இதுவரை அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

உலக சுகாதார நிறுவனம் இலங்கையில் வாழும் 20 வீதமன மக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. 21 மில்லியன் மக்கள் வாழும் இலங்கையில் 20% மக்களுக்கு மாத்திரம் (4.2 மில்லியன் மக்களுக்கு) தடுப்பூசி கிடைக்கவிருப்பதாக இலங்கையின் சுகாதார அமைச்சு ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகிறது. ஆக, மிகுதி 80 வீதமானவர்களை மரணத்தின் விழிம்பிற்குள் அழைத்துவந்து நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு.

நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படாத நிலையில், தடுப்பு மருந்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதாக இலங்கை அரசு அறிவித்தாலும், மிகவும் தாமதமாகவே அது பாவனைக்கு வரும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக எந்த எதிர்க்கட்சிகளும் கேள்வியெழுப்பவில்லை. மணல்கொள்ளைப் பிரச்சனைகளைக்கூட ஐ.நா சபைக்குக் கொண்டு செல்லப்போவதாக அடம்பிடிக்கும் தமிழ்க் கட்சிகள் கூட இதுவரை அரசை நோக்கி ஒரு கேள்வியைக்கூட முன்வைக்கவில்லை.

Exit mobile version