இன்று நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலுக்கான தொலைக்காட்சி உரையாடலில் வெளிநாட்டுக் குடியேற்றம் தொடர்பான விவாதமே பிரதான பாத்திரம் வகித்தது. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக்கொண்டர்கள். ஹெ.ஐ.வி நோய்க்கிருமிகளைக் கொண்டவர்களில் 60 வீதமான வெளி நாட்டவர்கள் இலவச மருத்துவச் சேவையைப் பெற்றுக்கொள்கிறர்கள் என்று தனது நாசிக் கருத்துக்களை பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜெல் பிராக் முன்வைத்த போது எந்தக் கட்சிகளும் அதனைப் பலமாக எதிர்கொள்ளவில்லை. இவ்வேளையில் சில காலங்களின் முன்னால் நடைபெற்ற நைஜெல் பிராக் உடனான ரசல் பிரண்டின் விவாதம் கவனிக்கத்தக்கது.