Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

News 18 தமிழ் ஊடகத்தின் மீதான் ஆர்.எஸ்.எஸ் வன்முறை

இந்தியாவில் மட்டுமன்றி தெற்காசியா முழுவதினதும் அவமானகரமான சமூகவிரோத கும்பலாக தனது விச வேர்களை இந்திய ஆ.எஸ்.எஸ் கும்பல் பரப்பிவருகிறது. திட்டமிட்ட மதக் கலவரங்கள், மத அடிப்படையிலான தாக்குதல்கள், ஊடகங்கள் மீதான வன்முறை, கொலை மிரட்டல்கள் என்ற அனைத்து சட்டவிரோதச் செயல்களையும் திட்டமிட்டு நடத்திவரும் இக் கும்பல் தொடர்பாக தமிழக மக்கள் மிகவும் அவதானமாகவே செயற்பட்டனர். திராவிட கோட்பாடு என்பது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களைத் தகர்த்து முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்கும் வலிமை பெற்றிருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் முன் முகமாகச் செயற்படும் பீ.ஜே.பி இன் மதவெறி அரசியல் தொடர்பாக தமிழக மக்கள் விழிப்புடனேயே இருந்துவந்தனர்.

சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமாக குழந்தைகளை வன்முறை மதவெறிப் பயிற்சிகளுக்காக முகாம்களில் இணைத்துக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் இன் பயிற்சி முகாம்கள் கூட தமிழகத்தில் வெற்றியடையவில்லை.
இந்த நிலையில் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சமுகவிரோதக் கருத்துக்களின் பக்கம் சராமல் செயற்பட முனைந்த ஊடகவியலாளர்களைப் ஊடகப்பொதுத் தளங்களிலிருந்து அகற்றி, ஊடகங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டுவருகிறது.

இதன் தொடர்ச்சியாக News 18 Tamil என்ற ஊடகத்தைக் கையகப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் அந்த ஊடகத்திலிருந்த குணசேகரன் உட்பட தமக்கு நேரடியான ஆதரவளிக்க மறுத்த ஊடகவியலாளர்களை தரவிறக்கம் செய்துள்ளது.

இச் செயற்பாட்டில் ஊடகங்களை அசுறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசின் அமைச்சர், ஆ.எஸ்.எஸ் சமூகவிரோதக் கும்பலின் அடியளான நிர்மலா சீதாராமன் நேரடியால ஈடுபட்டதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறைக்கு எதிராக உலகம் முழுவதும் ஊடகவியலாளர்கள், குரலெழுப்புவது இன்றைய காலத்தின் வரலாறுக் கடமை.

Exit mobile version