நேற்று 01.12.1963 அன்று சிறைக் கைதிகளைக் கொசுக்கள் போல சுட்டுக்கொல்ல இலங்கை அரசு உத்தரவிட்டது. வன்னியில் சாரிசாரியாக மனிதப் படுகொலைகளை நடத்திய அதிகாரிகளும் ஜனாதிபதியும் இன்றைய ஆட்சியில் நிறைவேற்று அதிகாரத்தைக் கையகப்படுத்தியுள்ளதன் பலனே நேற்றைய தாக்குதலின் ஊற்றுமூலம். இன்டர் நெட் உரையாடல்களுக்குள் முடங்கிப் போன தமிழ்த் தேசியத்திற்கு இந்தக் கொலைகள் குறித்து எந்தக் கவலையும் கிடையாது. சுதந்திர ஊடகங்கள் அற்றுப்போன நிலையில் மக்களுக்குத் தகவல் அறியும் உரிமை மறுக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

சிறைக் காவலர்கள் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நடத்திய கோராத் தாக்குதலில் நிராயுதபாணிகளான 11 சிறைக் கைதிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயத்திற்கு உள்ளாகினர். கொரோனா அச்சத்தில் போராடியவர்களைக் கொன்று போட்டுவிட்டு நியாயம் சொல்கிறது இலங்கை போர்க்குற்ற அரசு. இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு தண்டனை வழங்க சிங்கள மக்கள் அணிதிரளும் காலம் விரைவில் தோன்றும்.