Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவ மயமாக்கல் : மகிந்த பாணியில் மைத்திரி

maithiripalaதிங்கட்கிழை வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முப்படையினரையும் தலைநகர் கொழும்பு, வடகிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டமொழுங்கை நிலைநாட்டுவதற்கு உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலிசாருக்குப் பதிலாக இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். நூறு நாட்களில் மகிந்த ஆட்சியின் அதிகாரங்களைத் தலைகீழாக மாற்றுவதாகக் கூறும் மைத்திரி அரசு ஒரு சில வாரங்களுக்கு உள்ளாகவே முகாம்களில் முடக்கப்பட வேண்டிய இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலின் இலங்கைப் பயணத்தின் சற்றுப் பின்னர் வெளியாகியுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக மைத்திரி அரசின் ஊது குழல்களாகச் செயற்படும் தமிழ்- சிங்கள – ஆங்கில ஊடகங்கள் பல்வேறு விளக்கங்களை எழுதிவருகின்றன.

தனது ஒடுக்கும் தேவைக்கும் அதிகமான இராணுவத்தைக் கொண்டுள்ள இலங்கை அரசு இராணுவ மயப்படுத்தலைத் தொடர்வதைத் தவிர வேறு வழிகளற்ற நிலையை வந்தடைந்துள்ளது.

http://www.sltda.gov.lk/standards

Exit mobile version