Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனச்சுத்திகரிப்பை நல்லிணக்கம் எனக் கூறும் அமெரிக்க அரசு

neilkromashராஜபக்ச அரசின் அதே ஆட்சி புதிய வடிவத்தில் தொடரும் அவலம் நிறைந்த சூழல் இன்னும் தொடர்கிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்குக் கூட புதிய இலங்கை அரசு தயாராக இல்லை. கைதுகள், கண்காணிப்பு, இராணுவ ஆக்கிரமிபு, பல்தேசியக் கொள்ளை என்ற அனைத்தும் தொடர்கின்றன. வன்னியில் ஒரு லட்சம் மக்கள் கொன்று போடப்பட்டதை இனப்படுகொலை எனக் கூறுவதற்குக் கூட உரிமை இல்லை என்று பிரதமர் ரனில் கூறுகிறார்.

இனப்படுகொலை நடத்திய ராஜபக்ச பரிவரங்கள் இலங்கையிலும் உலகம் முழுவதிலும் எந்த அச்சமுமின்றி தமது வாழ்கையைத் தொடர்கின்றன. லட்சம் அப்பாவிகளை அழித்துவிட்டு சமூகத்தில் உயர் நிலையில் கொலையாளிகள் எவ்வித அச்சமுமின்றி நடமாடுகின்றனர்.

இவை அனைத்துக்கும் மத்தியில் இலங்கையில் சமாதானம் ஏற்படும் சூழல் தோன்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பிராந்திய வலய பிரதி இயக்குனர் நீல் குரோமாஷ் கல்கத்தாவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் ஆட்சியிலமர்த்தப்பட்ட ராஜபக்ச குடும்பம் தனது இனக்கொலைப் பணியை முடித்துக்கொண்டதும், அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட புதிய அரசு அதன் அடியாளாக தனது ஆட்சியைத் தொடர்கிறது. இதனையே நல்லிணக்கம் என்று அமெரிக்க அரசு அழைக்கிறது. இந்த நல்லிணக்கம் தொடர்வதற்கு இலங்கை அரசோடு ஒத்துழைக்கப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version