சிங்கள கிராமவாசிகளின் எதிர்ப்பு உருவானதும் டோல் இதனைத் தொடரப் போவதில்லை என அறிவித்தது. இருப்பினும் Environmental Conservation Trust of Sri Lanka என்ற தன்னார்வ நிறுவனம் இதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டதாக 2011 ஆம் ஆண்டு அறிவித்து தமது எதிர்ப்பையும் தெரிவித்தது. முரளி குழு மூச்சுக்கூட விடவில்லை. முரளியின் மண்டேலா ராஜபக்ச எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. 5000 ஏக்கர் கபளிகரம் செய்யப்பட்டு யானைகள் உட்பட விலங்குகள் மக்களின் நாளாந்த வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாகியது. இங்கு கேள்வி இது தான். முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு மட்டும் எதிரானவரா?
முத்தையா முரளிதரன் போன்றவர்கள் ராஜபக்சவின் முகவர்களாகச் செயற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியதை விட பல் தேசிய கொள்ளையர்களின் முகவர்களாகச் செயற்படுவதன் ஊடாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளாத உணர்ச்சி அரசியலை முன்வைத்து ஈழ மக்களின் வாழ்வை அரசியல் வியாபாரமாக்கும் ஒரு கூட்டம் உலகின் அனைத்துச் சிக்கல்களிலிருந்தும் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களை அன்னியமாக்கி இன வெறியைக் கட்டமைக்க முயல்கிறது. உடனடியாக அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டிய நாம் தமிழர் என்ற அருவருப்பான வெறுப்பு அரசியலை முன்வைக்கும் குழு, விஜய் சேதுபதி மன்னிபுக் கோர வேண்டும் என்று லண்டனில் போரட்டம் நடத்தியிருக்கிறது. இதன் முக்கிய ‘பொறுப்பதிகாரி’யான துரை முருகன் என்பவர் விஜய் சேதுபதியோடு தமக்கு எந்தச் சிக்கலும் இல்லை என யூ டியூப் காட்சியில் நாடகமாடுகிறார். விஜய் சேதுபதின் மகள் பாலியல்ரீதியாக மிரட்டப்படுகிறார்.
மொழி வெறியை முன்வைத்து தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் தமிழரசுக் கட்சி போன்ற வலது சாரி அமைப்புக்கள் கூட அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை. விஜய் சேதுபதி என்ற நடிகரை நோக்கி கோரிக்கை வைப்பது என்பது ஒவ்வொருவரதும் உரிமை அவரை மிரட்டுவது என்பது வன்முறை. வாக்குப் பொறுக்குவதற்காக ஈழத் தமிழர்களைப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர இந்தக் கும்பல் எந்த நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தேசிய இனம் வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம்.
47 தலைமுறையாக தமிழ் நாட்டில் வாழ்ந்த வீரபாண்டியக் கட்டப்பொமனையே தெலுங்கன் என்று தூற்றும் இந்தக் கும்பலின் இன வெறி தேசியத்திற்கும் தேசங்களின் உருவாக்கத்திற்கும் எதிரானது. தமிழ் நாட்டின் மக்கள் சுயாட்சிக்கும் சுய நிர்ணைய உரிமைக்கும், ஈழத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் போன்றே உரித்தானவர்கள். ஒவ்வொரு தமிழனையும் டீ.என்.ஏ சோதனை செய்து தமிழன் என்று உறுதிப்படுத்தக்கோரும் அருவருப்பான நாம் தமிழர் குழு ஒரு அரசியல் சாபக்கேடு.
https://www.bbc.co.uk/news/world-asia-15845457