Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

2016 ஆரம்பம்; மூனிச் நகரில் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை; மக்கள் வெளியேற்றம்

Munich-Getty2016 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான எச்சரிக்கையில் ஆரம்பித்துள்ளது. ஜேர்மன் நாட்டின் மூனிச் நகரத்தின் ரயில் நிலையங்களில் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகரின் போலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

நகரின் இரண்டு புகையிரத நிலையங்களில் ஒன்றிலிருந்து மக்களை போலிஸ் அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளது. தமக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறும் போலிஸ், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறியுள்ளது.ஐரோப்ப முழுவதும் குண்டுத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் அச்சம் காரணமாக 2016 ஆம் ஆண்டின் ஆரம்பக் களியாட்டங்களில் வழமைக்கு மாறாக குறைவான மக்களே பங்குபற்றியுள்ளனர்.

இதே வேளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியது மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரே என முன்னை நாள் பிரித்தானிய உளவுத்துறை அதிகாரியான டேவிட் ஷெலர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version