இவை எல்லாம், ஈழத்தில் திட்டமிட்ட அழிப்பு நடந்துகொண்டிருக்கும் இடை நடுவிலேயே நடந்துகொண்டிருக்கிறது.
இவ்வளவு சொற் செலவு, பொருட் செலவு என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஆரம்பித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை பற்றி உடனே நினைவுச் சுழலில் வருவது கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள் என்ற அமைப்பு -Tamils for conservative- . பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொங்கு அமைப்பான கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள் என்ற அமைப்பின் தலைவர் அர்ச்சுனா சிவானந்தம் என்கிற ஹை புரபைல் மனிதன். பார்க்ளேஸ் வங்கி உலகின் பல பாகங்களிலுன் நடத்திய நிதிப் பயங்கரவாதத்தைப் பேசாமல் விட்டாலும் அர்ஜுனா சிவானந்தன் பார்க்ளேஸ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர் என்பதை இங்கு பேசாமல் இருக்க முடியாது.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் கொன்சர்வேட்ட்விற்கான தமிழர்கள் அமைப்பு அக்கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஒருவர் ஈழத்தின் இருதயத்தில் எண்ணைக் கழிவுகளைச் செலுத்தி நீரையும் நிலத்தையும் நச்சடையச் செய்யும் போது எங்கே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான நிர்ஜ்
தேவா சுன்னாகத்தில் அழிப்பு நடத்தி நீரையும் நிலத்தையும் நாசமாக்கிய நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். தேவா குறித்து இதுவரையும் ஆயிரம் தடவைகள் பேசியாயிற்று.
சரி, இன்று நாட்டில் எரியும் பிரச்சனையான சுன்னாகம் நீர்ப் பிரச்சனைக்கு பிரிஎப் போன்ற அமைப்புக்கள் தமது துணை அமைப்புக்கள் ஊடாக என்ன அழுத்தங்களைக் கொடுத்தனர்? ஈழத்தில் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்ட பின்னரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினமும் மாவீரர் நினைவு தினமும் மட்டுமே ‘இருக்கிறோம்’ என விளம்பரப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுமோ? நினைவு கூரல் முக்கியமானதே அதற்காக அழிவுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதும், அதற்குத் துணை செல்பவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதும் எப்படி நியாயமாகும்?