Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகத்தில் நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனம் லண்டனில் இலங்கையின் பிரதிநிதி

businessforumஇலங்கையில் முதலிடுமாறு பல்தேசிய நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கும் கூட்டம் ஒன்று கடந்த வாரம் லண்டனில் நடைபெற்றது. இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சுவிஸ் நாட்டில் ஆரம்பித்துவைத்த முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து லண்டன் நகரக் கூட்டம் கடந்தவாரம் 29ம் திகதி ஓகஸ்ட் மாதம் ஆரம்பமானது. லண்டன் சவோய் ஹொட்டேலில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான மாநாட்டில் 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இலங்கையிலிருந்து 12 நிறுவனங்கள் அந்த நாட்டின் வர்த்தக வெற்றியைப் பிரச்சாரப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையிலிருந்து ஹட்டன் நஷனல் வங்கி உட்பட பல வங்கிகள் கலந்துகொண்டன.

வடமாகாணத்தில் சுற்றுச் சூழல் குற்றங்களில் ஈடுபட்டு எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் உலகை வலம்வரும் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் கலந்துகொண்ட நிறுவனங்களில் பிரதான இடத்தை வகித்தது. சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்திய நோதேர்ண்பவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவர் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் ஆலோசகருமாவர்.

சுன்னாகத்தில் அதிபார கழிவு எண்ணையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்த இந்த நிறுவனம், அப்பகுதி நீரையும் நிலத்தையும் நாசப்படுத்தி சுற்றுச் சூழல் சர்வதேசக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரச ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை அரசோ, வட மாகாண சபை அரசோ இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவராணமும் வழங்கவில்லை. நஞ்சாக்கப்பட்ட நீரைச் சுத்தப்படுத்தும் வழிமுறைகளிருந்தும் அவை மேற்கொள்ளப்படவில்லை. இத்தாலியில் நீரை அசுத்தப்படுத்திய நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் இன்று சர்வதேச குற்றவியல் போலீஸ் இன்டர்போலால் தேடப்படுகிறார்.

எம்.ரி.டி வோக்கஸ் லண்டனில் ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.

Exit mobile version