இலங்கையின் ரூபாயின் நிலைத் தன்மையைப் பேணும் இலங்கை மத்திய வங்கியும் இந்திய இந்திய ரிசேர்வ் வங்கியும் 1.5 பில்லிய ந் டொலர் பணப் பரிமாற்று ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கையின் நாணய மாற்றுப் பெறுமதியை இந்தியாவின் பிடிக்குள் கொண்டுவருவதற்குரிய ஆரம்பப் புள்ளியே இந்த நடவடிக்கை. தவிர, இந்தியாவிற்கான விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. டெல்லிக்கான நேரடி விமானச் சேவையை ஏயர் இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.
இந்தியாவில் பௌத்த சக்கர புனிதப் பயணத்தை இந்தியா விரிவு படுத்தவும் இலங்கையில் ராமாணயணப் பயணத்தை விரிவு படுத்தவும் மோடி – மைத்திரி ஒப்பந்தம் ஏற்றுக்கொள்கிறது.
இலங்கையின் அரசியல் மையப் புள்ளியை தமிழ் நாட்டிலிருந்து டெல்லியை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சி வர்த்தக இலாப வெறியுடன் இணைத்துச் செயற்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரவி குமார் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மோடியின் இந்து பாசிசக் கட்சி இதுவரையில் தமிழ் நாட்டில் இடைத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. தமிழ் நாட்டில் இழையோடும் தேசிய உணர்வை மிக நீண்டக் காலத்திற்கு இனவாதப் பிழைப்பு வாதிகளின் பிடிக்குள் வைத்திருக்க முடியாது என்பதை அறிந்துகொண்ட மோடியின் அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியே இது. மோடி அரசு இலங்கை தொடர்பான விவகாரங்களை டெல்லியை நோக்கி நகர்த்துவதன் ஊடாக ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத முயற்சிக்கிறது.
அதே வேளை சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் தீனி போட ஆரம்பித்துள்ளது.