பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதுவரை படுகொலைகளுக்காகத் தண்டிக்கப்படாத இந்தியாவின் இனக்கொலையாளியும் இலங்கையின் இனக்கொலையாளியும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு உலகம் மனிதர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்றதாக மாறுவதைக் காட்டுகிறது.
இலங்கையில் நரேந்திர மோடியின் அக்கறைக்கு உட்பட பிரதேசங்களுக்கு அவர் பயணம் செய்துள்ளார். மன்னாருக்குச் சென்ற மோடி அங்கு ரயில் சேவையைத் திறந்து வைத்தார். மன்னார் கடற்படுக்கையில் இயற்கை வாயு விற்பனைக்குத் தயாராகிவிட்டதாக அண்மையில் இலங்கையின் மின் வலு அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மைத்திரிபால சிரிசேன இலங்கை ஜனாதிபதியாகிச் சில நாட்களுக்குள்ளேயே மோடியுடன் அணுசக்தி ஒப்பந்ததில் கைச்சாத்திட்டார். அதன் பின் சில நாட்களுக்கு உள்ளாகவே இந்தியாவின் அணு சக்திக் கழிவுகளை தொடர்பாக இலங்கை மின்வலு அமைச்சர் குறிப்பிட்டார்.
சுன்னாகம் அழிப்பைத் தொடர்ந்து யாழ்ப்பணம் மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்கள் இந்திய அணுசக்திக் கழிவுகளை வெளியேற்றும் பிரதேசங்களாகப் பயன்படும் என்ற சந்தேகங்கள் தெரிவிக்கபடுகின்றன.
ஆக, நரேந்திர மோடியின் இலங்கப் பயணத்தின் உண்மையான அர்த்தம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.