இலங்கையில் நடந்த அத்தனை போராட்டங்களுக்கு எதிராகவும் இராணுவ மற்றும் கோட்பாடு உதவிகளை பிரித்தானிய அரசுகள் 70 களிலிருந்து வழங்கிவந்தன. வன்னிப் படுகொலையின் போது பிரித்தானிய ஆயுதங்கள் துளைத்து ஆயிரக்கணக்கானோர் மாண்டு போயினர். வேட்பாளப் பெருமக்கள் இவற்றை அறியதவர்களாக இருக்கலாம். எது எவ்வாறாயினும் பிரித்தானியாவின் பிரபல அரசியல் வாதி ஒருவர் இன்றும் சிங்கள பௌத்த லொபிக் குழுவை ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் நடத்தி வருகிறார்.
இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்களில் நிரஞ்சன் தேவா (நிர்ஜ் தேவா) ஒருவர். சிறீலங்கன் எயர் லைன்சின் இயக்குனராக ரனில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டவர். இது தவிர சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் தேவாவும் ஒருவர். நிர்ஜ் தேவா வெலிவேரியாவில் மக்களைக் கொலைசெய்த ஹேலிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான லங்கா ஹொட்டேல்ஸ் இன் இயக்குனர்களில் ஒருவர். எம்ரி.டி வோக்கஸ் நிறுவனத்திலிருந்து தனக்கு 5000 பவுண்ஸ் வரை மாதம் ஒன்றிற்கு வருமானம் கிடைப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற வருமானக் குறியீட்டில் குறிப்பிட்டுள்ளார்(இணைப்பு).
தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டுச் செல்லும் வேட்பாளர்கள் இந்த அழிவை பிரித்தானிய அரசியல் வாதி பின் நின்று நடத்துவதை பிரித்தானிய மக்களுக்குச் சொல்வார்களா? இது குறித்து அவர்கள் பேசத் தவறினால் அவர்கள் தம்மை அயோக்கியர்கள் என ஒத்துக்கொள்வார்களா?
ஐரோப்பியப் பாராளுமன்ற ஆவணம்:
http://www.europarl.europa.eu/mepdif/4556_DFI_LEG8_rev1_EN.pdf
எம்.ரி.டி வோக்கஸ் இணையத்தில்:
http://www.mtdwalkers.com/commercial-building-construction.html