இன்று நவ தாராளவாதப் முதலாளித்துவப் பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள தவிர்க்க முடியாத நெருக்கடி தீவிர தேசிய வெறியை முழங்கும் தேசிய முன்னணி போன்ற கட்சிகள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன.
ஐரோப்பிய அமெரிக்க முதலாளித்துவத்தின் அதிகார மையங்கள் லூ பென் குடும்பத்தின் நிறவெறி அரசியலையும் தேசிய வெறியையும் வளர்க்கின்றன. ரைம்ஸ் சஞ்சிகை மரியான் லூ பெனை அட்டப்படமாகப் போட்டது.
பிரான்சின் ஒவ்வொரு மூலையிலும் நிறவெறி தாண்டவமாடும் அளவிற்கு அது விருட்சமாக வளர்ச்சியடைந்துள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலப்பட வேண்டிய மரியான் போன்ற கிரிமினல்கள் ஏகாதிபத்திய ஊடகங்களின் அட்டைப்படங்களை அலங்கரித்துக்கொள்ள அதனைக் கேட்பதற்கு யாருமற்ற நிலை தோன்றியுள்ளது.
மரியான் லூ பென் இன்று -05.02.-2015- ஒஸ்போர்ட் பல்கலைக் கழக யூனியனில் உரையாற்றுவதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னூறு பேர் வரை கலந்துகொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளில் கிரேக்கத்தில் வளர்க்கப்பட்ட தங்க விடியல் என்ற நிறவாதப் பாசிசக் கட்சியைத் தோற்கடித்த இடதுசாரி ஜனநாயகக் கட்சிகள் ஆட்சியமைத்துக்கொண்டன. பிரான்சில் சீரழிந்து சிதைந்து போயிருக்கும் இடதுசாரிகள் என அழைக்கப்படும் கட்சிகள் லூ பென் கட்சியை எதிர்கொள்ள இயலத நிலையிலுள்ளன.
பிரன்ஸ் பிரஞ்சுக் காரர்களுகே என்று முழக்கத்துடன் வெள்ளையர்கள் அல்லாதவர்களை குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் லூ பென் கும்பலின் வளர்ச்சி சார்ளி எப்டோ தாக்குதலின் பின்னர் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றது. உலகம் முழுவதும் பாசிஸ்டுக்களை ஆட்சியலமர்த்துவதையே முதலாளித்துவ சமூகம் தற்காலிக தீர்வாக முன்வைக்கிறது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகக் கவுன்சிலர் ஜோன் டானர் குறிப்பிடுகையில் ஒக்ஸ்போர்டைச் சார்ந்த மக்கள் தீவிர வலதுசாரி நிறவாதியான மரீன் லூ பென் போன்றவர்களுக்கு மேடை கொடுப்பதை விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.