Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரிபால பேரினவாதியாக இனம்காட்டினார், டில்ருக்ஷிபதவி துறந்தார்.

Sri Lanka's President Maithripala Sirisena attends a meeting during the Asia Cooperation Dialogue (ACD) summit at the Foreign Ministry in Bangkok, Thailand,
Sri Lanka’s President Maithripala Sirisena attends a meeting during the Asia Cooperation Dialogue (ACD) summit at the Foreign Ministry in Bangkok, Thailand,

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை மாறாக போரின் போது மனித உரிமை மீறல்களே இடம்பெற்றன என இந்த வருட ஆரம்பத்தில் கூறிவந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது முகத்திரையைக் கிழித்து பேரினவாதியாக இனம்காட்ட ஆரம்பித்தார். அமெரிக்காவின் துணையுடன் ஆட்சியிலமர்ந்த மைத்திரிபால சிரிசேன சுதந்திரக் கட்சியைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நோக்கில் பேரினவாதத்தைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை இலங்கையின் வரலாற்று வழி வந்த சிங்கள பௌத்த மனோ நிலையின் எமது காலத்திற்குரிய குறியீடு.

கிறீஸ்தவர்களான சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை உருவாக்கி வளர்த்தைத் தொடர்ந்து, சிங்கள பௌத்தம் அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்கான தத்துவார்த்தக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இன்று சுதந்திரக் கட்சியின் முழு அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மைத்திரிபால சிரிசேன பேரினவாத்ததை உமிழ ஆரம்பித்துள்ளார்.

கடந்த வாரம் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கையின் அறியப்பட்ட போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்சவும் மூன்று கடற்படைத் தளபதிகளும் விசரணைக்கு உபடுத்தப்பட்டிருந்தனர். போர்க்கால கதாநாயகர்களாகப் போற்றப்பட்ட இந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரிலேயே கைதாயினர்.

இதன் பின்னர், ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மைத்திரிபால சிரிசேன தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் தலைவர் டில்ருக்ஷி விக்ரமசிங்க தனது பதவியைத் துறந்துள்ளார். மைத்திரி தெரிவித்த கருத்துக்கள் காரணமாகவே தான் பதவி விலகியதாகத் டில்ருக் ஷி தெரிவிக்கிறார்.

சிங்களப் பேரினவாதிகள் தமது சமூகவிரோதச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர், இதனைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ் இனவாதிகள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் தயார் நிலையிலுள்ளனர். இந்த இரண்டு பகுதிகளும் தமது சொந்த நலன்களுக்காக அழிவுகளை ஏற்படுத்த தயார் நிலையிலுள்ளனர்.

ஆக, இனவாதச் சாயம் பூசப்பட்டாத முற்போக்கு தேசியவாதத்தின் அடிப்படையிலான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வெற்றியடையும் வரை தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மட்டுமன்றி சிங்கள மக்களும் இலங்கை ஆளுவர்க்கதினரால் ஒடுக்கப்படுவார்கள் என்பது வெளிப்படையானதே.

Exit mobile version