Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகின் கோரமான கொலையாளி மகிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தயாராகிறார்

Mahinda-Rajapaksaமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் இணைந்து நாளை கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிச்சயமாக கலந்து கொள்வார் என தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை கூட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்ததால், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையில் உருவாகும் புதிய முன்னணியின் ஊடாக மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட இணக்கம் வெளியிட்டுள்ளதாக கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் தனக்கு கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த கலந்து கொள்ளாத நிலையில், தனக்காக லட்சக்கணக்கான மக்கள் கூடியதால், அந்த மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் மகிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். கண்டியில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு 8 லட்சம் மக்கள் வருவார்கள் என தேசிய சுதந்திர முன்னணி நம்புகிறது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தையும் மீறி அந்த கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் அந்த பிரதிநிதி மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூரமான கொலையாளியும் கிரிமினலுமான மகிந்த ராஜபக்சவை சகல சுந்தத்திரத்தோடும் உரிமைகளோடும் மக்கள் மத்தியில் உலவாவிட்டுள்ளது மைத்திரிபால சிரிசேனவின் அரசு. மகிந்த தலைமை தாங்கி நடத்திய வன்னிப் படுகொலைகளைத் தவிர ஊழல் குற்றம், பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் நேரடியான தொடர்புடைய மகிந்த ராஜபக்ச தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என தேர்தலுக்கு முன்னான மக்களின் எதிர்பார்ப்பு வலுவிழந்து இன்று பிரதமர் பதவிக்காக மகிந்தகும்பல் ஏனைய சமூகவிரோதிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது.

Exit mobile version