இதனால் மகிந்த எதிர்ப்பாளர்கள் மீண்டும் கொலை மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுகும் உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது.
ஆட்சியைக் கையகப்படுத்திய மறுகணமே தனது சகோதரரை சிறீலங்கா ரெலிகொம் இன் தலைவராக நியமித்த மைத்திரிபால மேற்கு ஏகபோக அரசுகளின் ஆணையுடன் நடத்தியது நல்லாட்சியல்ல. காட்டிக்கொடுப்பு!
உலகத்தின் மிகப்பெரும் கொலையாளிகளில் ஒருவரும், ஒரு நாட்டையே சூறையாடிய்வருமான மகிந்த ராஜபக்சவை மைத்திரியால் முற்றாக அழித்திருக்க முடியும் எனினும் மீண்டும் மகிந்தவை அழைத்துவருவதன் பின்னணி ஆபத்தானது.
இந்த நிலையில் பேரினவாத அரசியல் கட்சிகளின் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள – தமிழ் ஜனநாயகவாதிகள் இடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும். இன்று அது ஏற்படாவிட்டால் எஞ்சியிருக்கும் விரல்விட்டெண்ணக்கூடிய ஜனநாயக சக்திகளும் அழிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
சுய நிர்ணைய உரிமை என்ற அடிப்படை முதலாளித்துவ ஜனநாயகம் உட்பட ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இது சிறந்த சந்தர்ப்பம்.
மகிந்தவிற்கு எதிரானவர்களின் அனைத்துப் பட்டியலும் திட்டங்களும் மைத்திரியின் கைகளில் உள்ளது. இனிமே மைத்திரியும் மகிந்தவும் இணைந்து இவர்களை வேட்டையாடுவார்கள். இந்த வேட்டைக்கு எதிரான திட்டம் மக்கள் சார்ந்து இன்று அவசரமாக உருவாக்கப்பட வேண்டும்.