CSR இல் தம்மை இணைத்துக்கொள்ளும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள் பொதுவாக கொலைசெய்துவிட்டு கண்ணீரஞ்சலிக்கு நிகழ்விற்குப் பணம் கொடுக்கும் அரசியலுக்கு ஒப்பானது.
உலகின் மிகப்பெரிய சிகரட் தயாரிப்பாளர்களான பிலிப் மோரிஸ் நிறுவனம், 30 மில்லியன் டொலர்களை 1.1 மில்லியன் மக்களுக்கு மருத்துவ உதவியாக வழங்கி தனது CSR ஐ பெருமையுடன் விளம்பரப்படுத்துகிறது.
உலகத்தின் சில பகுதிகளைப் போராலும், சில பகுதிகளை பெற்றோலிய நச்சுக்களாலும் நிரப்பும் பிரித்தானிய பெற்றோலியம் நிறுவனம்*(BP) 8 பில்லியன் டொலர்களை மாற்று எரிசக்திக்கான ஆய்வுகளுக்காக வழங்கியுள்ளது.
ஒரு புறத்தில் இலாபத்திற்கான வரி ஏய்ப்பை நடத்தும் இந்த நிறுவனங்கள் மறு புறத்தில் நாடுகளின் அரசியலில் தலையிட்டு முதலீட்டுக்கான தளத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
லைக்கா மோபைல் நிறுவனம் CSR இன் அடிப்படையில் இலங்கையில் அகதிகளுக்கான குடியேற்றத் திட்டம் ஒன்றைத் 25/08/2015 அன்று திறந்துவைத்துள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை ராஜபக்ச நடத்துவதற்கான பண உதவியையும் லைக்கா வழங்கியிருந்தது.
இது தொடர்பாக வெளிக்கொண்டுவந்த இனியொரு மற்றும் லங்கா நியூஸ் வெப் ஆகிய நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்த நிறுவனத்தின் கூலிப்படைகளால் இணையத்தில் நிழல் உலக மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
எது எவ்வாறாயினும், ஊடக சுதந்திரம் என்பது அருகிபோய், ஒற்றைப்பரிமாணக் கருத்துக்களுக்கு மட்டுமே சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலின் இருண்ட பகுதிகளுக்குள் இனியொருவையும் இணைத்துக்கொள்ள வேண்டிய நிலை தோன்றுமானால் அதனை நிறுத்திவிடலாம்.
மகிந்தவிற்குப் பின்னர் இன்றைய இலங்கை அரசுடனும் லைக்காவின் தொடர்புகள் நிறுத்தப்படவில்லை. லைக்காவின் நடவடிக்கைகளை எதிர்த்து வாய்கிழியக் கூச்சலிட்ட சண்டேலீடர் போன்றன இப்போது மைத்திரியின் நண்பர்கள் என்பதால் உண்மைகள் இனி வெளிவரச் சாத்தியங்கள் குறைவு,
இந்த நிலையில் ஆபத்தான சூழலிலும் லைக்காவின் புதிய தொடர்புகளையும் அதன் அரசியல் பொருளாதாரப் பின்புலத்தையும் இனியொரு… வெளியிடுகிறது.
ராஜபக்ச அரசுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாக ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட பின்னரும் நல்லாட்சி அரசு லைக்காவிற்குப் புகலிடம் வழங்கியுள்ளது.
CSR இன் அடிப்படையில் லைக்கா இலங்கையில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை மேற்கொள்கிறது. வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்களுக்காக மேற்கொள்ளப்படும் இத் திட்டத்தைத் அடிக்கல் நாட்டித் திறந்துவைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க.
பல்தேசிய நிறுவனங்கள் சூறையாடுவதற்காக் அத்தனை கதவுகளையும் திறந்துவிட்டுள்ள இலங்கை அரசின் இடுக்குகளுக்குள் லைக்கா புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளது.
கண்டிய மேள வாத்தியம் முழங்க 25/08/2015 அன்று லைக்காவின் திட்டத்திற்கு நாட்டப்பட்ட அடிக்கல் லைக்காவின் புதிய வியாபாரத்திற்கான மூலைக்கல்.
* http://anticsr.com/csr-examples/
** https://en.wikipedia.org/wiki/SEA-ME-WE_5
தொடர்புடைய பதிவுகள்:
கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி
அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்!
லைக்கா விவகாரம் – தொடரும் கொலை மிரட்டல்களும் அழியும் ஊடக சுதந்திரமும்
லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு
லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்
லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்
லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்