நீரில் ஈயம் கலந்திருப்பது நிறுவப்பட்டிருப்பது நிறுவப்பட்டிருப்பதாகவும், ஈயம் கலந்த நீரை உட்கொண்ட மீன்களை உணவாக அருந்தியவர்களுக்குப் புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறுகள் உலகில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றாடலை மாசுபடுத்தும் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளோடு தொடர்புடையவராகக் கருதப்படும் பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர் நிர்ஜ் தேவா இயக்குனராக உள்ள எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனமே அதன் உப நிறுவனமான நோதேர்ன்பவர் ஊடாக சுன்னாகத்தில் சூழலை நச்சாக்கும் திட்டத்தில் ஈடுபட்டது.
லாப வெறி கொண்ட மற்றொரு பிரித்தானிய நிறுவனமான லைக்கா வாழ்வாதாரத்திற்கான மக்களின் போராட்டத்தைச் சிதைக்கும் நோக்கில் தண்ணீர்ப் போத்தல்களை சுன்னாகம் சார்ந்த சில பகுதிகளில் வழங்கிவிட்டு ஊடகங்களில் செய்திகளை வெளியிட ஆரம்பித்துளது.
பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரைப் பாதுகாக்க ஆளும் கட்சி பணம் பெற்றுக்கொள்ளும் முக்கிய நிறுவனமான லைக்கா களமிறக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன.
பிரித்தானியாவிலிருந்து ஈழம் பிடித்துத் தரப்போவதாக மக்களின் பணத்தைச் சூறையாடிய புலம்பெயர் அமைப்புக்கள் தமது எல்லைக்குள்ளேயே வாழ்ந்து யாழ்ப்பாணத்தை அழித்த நிர்ஜ் தேவாவைக் கண்டுகொள்ளவில்லை.
இன்றைய தகவல்களின் அடிப்படையில் மானிப்பாய் மற்றும் கோண்டாவில் வரை நச்சு நீர் பரவியுள்ளது.
மின் உற்பத்தியை நிறுத்துவதும், நீரைச் சுத்திகரிப்பதற்கான அவசரத் திட்டத்தை முன்வைப்பதும் தேவையாக உள்ள நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தன்னார்வ நிறுவனங்கள் தயாராகிவிட்டன.
சுன்னாம்புப் படுக்கை ஊடான நீர் யாழ்ப்பாணம் முழுவதும் நச்சாகி வருகிறது. நிலம் விளைச்சலுக்கு உதவாத கட்டாந்தரையாக்கப்படுகின்றது. கடலுணவு பாதுகாப்பற்றது என்ற நிலை தோன்றியுள்ளது.
இவற்றிற்கான தீர்வை முன்வைக்காத மைத்திரிபால அரசு இந்தியாவுடன் அணுசக்தி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் மட்டும் தீவிரம் காட்டியது. குறித்த கால எல்லைக்குள் சுன்னாகம் பேரழிவிற்கான தீர்வை முன்வைக்கத் தவறினால் அழிவுகள் தொடரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற வாக்குப் பொறுக்கிகள் இக் கால எல்லையை இலங்கை அரசிடம் கோருவார்கள் என்பது சந்தேகமே.