லிபியச் சர்வாத்காரி கடாபியுடன் தேனிலவை முடித்துக்கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் பிரஞ்சு உளவுத்துறையின் துணையோடு கடாபியைத் தெருவில் கொன்று போட்டது.
எதிரியானாலும் மனிதர்கள் கொல்லப்படும் போது துயர் கொள்ளும் மனிதாபிமானம் கொண்ட மனிதக் கூட்டத்தின் மத்தியில் கொலை வெறியை அமெரிக்க அரசு விதைத்து வளர்த்தது.
உலகெங்கும் மனிதக் கொலை என்பது சாதாரண நிகழ்வாகியது.
கடாபி கொல்லப்பட்ட போது அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பதவிவகித்த ஹில்லாரி கிளிங்டன் கடாபியின் கொலையைக் குதுகலித்துக் கொண்டாடுகிறார்.
இன்று லிபியவிலிருந்து அகதிகள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் மனித அவலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் பார்த்து மகிழ்கிறது. அகதிகளின் வருகையிலிருந்து தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறைகளைக் காண வேண்டும் என்கிறது ஐரோப்பிய அரசு!