Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தலுக்கான பணத்திரட்டலின் பின் மாவீரர் தினம்: புலம்பெயர் அரசியல் கேள்விக்குள்ளாகிறது

no27excelகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் மக்கள் மத்தியில் பணம் திரட்டப்பட்டது. பிரபாகரனின் பெயராலும் புலிகளின் பெயராலும் திரட்டப்பட்ட இப்பணம் கஜேந்திரகுமாரைத் தோல்வியடையச் செய்தது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அமோக வெற்றிபெறச் செய்திருக்கிறது..

கஜேந்திரகுமாரை பாராளுமன்ற உறுப்பினராக்கி முதலீடு செய்ய முனைந்த வியாபாரத்திற்கு எதிராக மக்களின் எழுச்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகளாகப் பதியப்பட்டன.

புலம் பெயர் பணத்தால் நடத்தப்படும் புலி அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். மக்கள் புலிகளின் போராளிகளின் தியாகத்தையும் அர்ப்பணத்தையும் மதிக்கின்ற அதே வேளை தோல்வியடைந்த புலிகளின் அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகக் காட்டி நிற்கின்றன.

குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணத் திரட்டலுக்குப் பேர் போன அமைப்பு. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் திரட்டப்பட்ட பணத்திற்கு இதுவரை கணக்குக் காட்டவில்லை. மில்லியன் கணக்கில் உலகம் முழுவது தனிநபர்களின் பெயர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் திரட்டப்பட்ட பணத்திற்குரிய பொறுப்புக்கூறலை மக்கள் எதிர்பார்த்தாலும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் தமிழர் ஒருங்கிணைப்பு மக்கள் மத்தியில் திணிக்க முயன்ற அரசியலின் தோல்வி தொடர்பான மீளாய்வு தேவை.

சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை வென்றெடுக்க புலம்பெயர் அமைப்புக்களின் தோல்விக்குப் பின்னான புதிய வேலைத்திட்டம் என்ன?
சுமந்திரன் – மங்கள – சுரேன் சுரேந்திரன் கூட்டணி ஏற்படுத்தப் போகும் அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ள இவர்களின் வேலைத்திட்டம் என்ன?

போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்படும் தமிழர்கள் தொடர்பாக புலம்பெயர் குழுக்கள் என்ன செய்யப் போகின்றன?

தேர்தல் தோல்விக்குப் பின்னர் பெரிய அளவில் பணம் புரளும் மாவீரர் நிகழ்விற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டதை புலம்பெயர் நாடுகளில் உணரக்கூடியதாக உள்ளது.

இக் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மாவீரர் தினம் உட்பட பண மூலங்களை இக் குழுக்கள் தேடினால் அழிவுகளை மேலும் ஊக்கபடுத்துபவர்களாகவே கருதப்படுவார்கள்.

Exit mobile version