ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க துணை ராஜாங்
கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதனை நோக்காகக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் நோக்கில் இந்தத் திர்மானம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.