அரசியல் யாப்பில் தமிழர்கள் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அனந்தியின் பிரதான கோரிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனந்தி சசீதரன் புலம்பெயர் நாடுகளில் முன்வைக்கப்படும் ‘தமிழ்த் தேசிய’ நிலைப்பாட்டை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை என்பது மலையக, முஸ்லீம் மற்றும் வட கிழக்குத் தமிழர்கள் என்ற மூன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் சிங்களப் பெருந்தேசிய இனத்தையும் கொண்ட நாடு.
நான்கு தேசங்கள் அமைந்த அந்த நாட்டில் மலைய முஸ்லிம் தேசிய இனங்களின் தனித்துவத்தை நிராகரித்து அவற்றை பெருந்தேசிய இனத்துடனோ அன்றி வட கிழக்குத் தமிழர்களுடனோ வலிந்து அடையளப்படுத்துவது என்பது அடிப்படையில் தவறானது மட்டுமன்றி அத்தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பதுமாகும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து புலம்பெயர் நாடுகளை மையமாகக்கொண்டு முன்வைக்கப்படும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது தேசிய இனம் குறித்த விஞ்ஞானபூர்வமான கருத்தியலின்றி முன்வைக்கபடுகின்றது.
தமிழ்ப் பேசுகின்ற அனைவரும் ஒரே தேசிய இனம் என்ற தமிழினவாதக் கருத்தியலின் அடிப்படையில் முன்வைக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கை ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கானதல்ல. அடிப்படையில் அது ஜனநாயக மறுப்பிலிருந்தே ஆரம்பமாகிறது.
இலங்கையில் பொதுவாக இந்த அடிப்படைகளை முன்வைத்து சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையை முன்வைக்கும் கட்சிகளோ அன்றி தனிநபர்களோ இல்லாமை ஆபத்தான சூழல்.
அனந்தி சசீதரன் வட மாகாணசபை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்: