Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் : சீ.வீ.விக்னேஸ்வரன்

cvwickneswaranசிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்களிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் சிலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து ஊட்டப்படும் சீ.வீ.விக்னேஸ்வரனின் போலித் தேசியத்தின் பின்புலத்தில் வட மாகாணத்தில் தேசியப் பொருளாதாரம் விருத்தி செய்யப்படவில்லை. விவசாய வளம் செயற்கை உரத்தின் நஞ்சால் அழிக்கப்படுகிறது. சுன்னாகத்தில் விக்னேஸ்வரனின் ஆதரவுடன் நடைபெற்ற அழிப்பில் குடா நாட்டின் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உணவகங்கள், குடிபானங்கள் என்று அனைத்தும் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் அழிக்கப்படுகின்றன.

உள்ளூர் வேலை வாய்ப்புகளை நிர்மூலமாக்கும் இச் செயற்பாடுகள் விக்னேஸ்வரன் தலைமையிலேயே நடைபெறுஜுன்றன. சிங்களம் கற்பிப்பதற்குப் பதிலாக தேசியப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் திட்டத்தை விக்னேஸ்வரன் முன்வைத்துச் செயற்படுவாரானால், நாளைய சந்ததிக்கு அது பயனுள்ளதாக அமையும்.

Exit mobile version