2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க அரசு அந்த நாட்டின் வட பகுதியில் அமைந்திருந்த குன்டூஸ் என்ற மருத்துவமனையைத் தாக்கியழித்தது. இத் தாக்குதலின் போது நோயாளிகள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.
40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரஞ்சு நாட்டு தன்னார்வ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்ட அந்த மருத்துவமனை எந்த முன்னறிவுப்பும் இன்றி அமெரிக்க விமானப்படையின் தாக்குதலுக்கு உள்ளானது.
அமெரிக்கத் தரைப்படைகளைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்திருந்தது. பின்னதாக ஆப்கான் அரசின் வேண்டிகோளிற்கு இணங்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் தளபதி ஜோன் கம்பெல் தெரிவித்திருந்ததர்.
மருத்துவமனை மீதான தாக்குதல் மனிதத் தவறே தவிர, அதனையெல்லாம் போர்க்குற்றம் எனக் கருத முடியாது என அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம் பெண்டகன் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தாக்குதலைப் போர்க்குற்றமாகக் கருதக் கூடாது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்தி ராஜபக்சவைத் தண்டிக்குமாறு இன்றும் கண்ணீர் வடிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இவற்றையெல்லாம் கண்டு கண்ணை மூடிக்கொள்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாக அழிவுகளுக்குத் துணை சென்ற இந்த அமைப்புக்கள் இன்னும் தம்மை நிறுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை.