Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி ஏன் கைதாகவில்லை : புதைந்திருக்கும் உண்மைகள்

MR_KPஇன்டர்போல் போலிசின் தேடப்படுவோர் வரிசையில் பட்டியலிடப்பட்ட கே.பி ஐக் கைதுசெய்யுமாறு ஜே.வி.பி தொடர்ந்த வழக்கு இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விஜித மலகொட மற்றும் ஏ.எச்.எம் நவாஸ் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கே.பி இன் கடவுச் சீட்டை முடக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கே.பி ஐக் கைது செய்வதற்கான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்வில்லை.

கே.பி இன் விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள், இன்றைய அரசில் அங்கம் வகிப்பவர்கள் உட்பட பலரின் பெயர்கள் உள்ளடங்கியிருப்பதால் அவை வெளியாகலாம் என்ற காரணத்தல் கே.பி கைது செய்யப்படவில்லை என இலங்கை உளவுத்துறையை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவிர கே.பி இலங்கைக்கு வந்தமைக்கான சட்டபூர்வப் பதிவுகள் இல்லை எனவும் இவை அதி உயர் பாதுக்காப்பு ஏற்பாடுகளுடன் தொடர்புடையவை எனவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது. தவிர, இலங்கை அரசின் பாதுகாப்பினுள் கைதியாகவே இன்னும் வாழ்வதாகக் கூறும் கே.பி தாய்லாந்திற்கு இரண்டுதடவை சென்று திரும்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆக, மலேசியாவில் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டது திட்டமிட்ப்பட்ட நாடகமே என்பது தெளிவாகிறது. தவிர, இறுதி நேரத்தில் கே.பி ஐரோப்பிய அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் தொடர்பிலிருந்தார். சனல் 4 தொலைக்காட்சி கே.பி ஐத் தொடர்புகொண்டது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்டார்.

இவை கே.பி இன் இலங்கைப் பயணத்திற்கும் மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கும் நேரடித் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்களும் உறுதியாகும் நிலையிலுள்ளன.

கே.பி கைதான வேளையில் மலேசியாவில் அவரோடு தொடர்பிலிருந்தவர்களும்., கே.பி இலங்கை சென்ற பின்னரும் அவருடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் மாபியக்களும் புலிகளைக் காட்டிக்கொடுத்ததில் பங்கு வகித்திருக்கலாம் என்ற உண்மைகளும் இதன் பின்புலத்தில் மறைந்துள்ளது.

ஜே.வி.பி இவ்விடயத்தில் தொடர்ந்து சட்டரீதியாகப் போராடினால் பல உண்மைகள் வெளிவரலாம். இவை அனைத்தையும் மூடி மறைப்பதற்காக இலங்கையில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் உளவுத்துறையின் துணையோடு கே.பியை அழித்துவிடலாம். உணமைகளை வெளிக்கொண்டுவருவதற்காக கே.பியைப் பாதுகாப்பதும், சட்டத்தின் முன்னால் நிறுத்துவதும் தேவையானதாகும்.

Exit mobile version