ஆளும் பாரதீய ஜனதாவின் வன்முறை துணைப்படைகள் நடத்திய ரத யாத்திரையைக் கண்டிது கோவன் பாடிய பாடல் இணையத் தளங்களில் பெரும் திரளான பயனர்களின் வரவேற்பைப் பெற்றதும் அக்கட்சியின் திருச்சி இளைஞர் அணிப் பொறுப்பாளர் போலீஸ் புகார் செய்தததைத் தொடர்ந்து கோவன் கைதானார்.
திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவன் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கைதின் போது மோடி அரசின் அடியாள் படை போன்று செயற்படும் தமிழ் நாடு போலிஸ் அனாகரீகமாக நடந்துகொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவின் இந்துத்துவ முகத்திரையைக் கிழித்து உலகம் முழுமைக்கும் தம்மை நிர்வாணமாகக் நிறுத்தும் மோடியின் பாசிச அரசு மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் இந்தியாவைப் போர்க்களமாக மாற்றும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளன.