Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிகள் கரப்பான் பூச்சி போன்றவர்கள், அவர்களை நிறுத்த ஆயுதக்கப்பல் அனுப்ப வேண்டும்: சண்

கேட்டி ஹோப்கின்ஸ்
கேட்டி ஹோப்கின்ஸ்

பிரித்தானிய பல்தேசிய ஊடகங்களுள் சண்(SUN) நாழிதழும் ஒன்று. பல சந்தர்ப்பங்களில் நிறவாதக் கருத்துக்களை வெளிப்படையாகவே எழுதும் சண் பிரித்தானியாவில் அதிகம் விற்பனையாகும் அச்சு ஊடகம். இரண்டாம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களின் நிர்வாணப் படம் சண்ணின் ‘சிறப்பு’. தீவிர வலதுசாரிக் கருத்துக்களைச் செய்தியாக உருமாற்றி சமூகத்தைச் சிதைத்துச் சீரழித்ததில் சண்ணின் பங்கு பிரதானமானது. நமது விஜய் தொலைக்காட்சியின் உரிமையாளர் ரூபெட் மெடொக் தான் சண் பத்திரிகையின் உரிமையாளரும் கூட.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பதாக 21 ம் நூற்றாண்டின் பொக்ஸ் நிறுவனம் என்ற வாசகங்கள் வந்துபோகும். அதே பொக்ஸ் நிறுவனமே சண் பத்திரிகையையும் நடத்திவருகிறது. தேர்தல் காலங்களில் வெளி நாட்டவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் போது சண் வெளி நாட்டவர்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றையே நடத்தும்.

சமூகத்தை நஞ்சாக்கும் சண் பிரித்தானிய ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு முன்னுதாரணம். சண் நிறுவனம் சமூகத்தில் உச்சத்திலிருக்கும் பணம் படைத்தவர்களை தனது ஊடகவியலாளர்களாக வேலைக்கு அமர்த்திக்கொள்ளும்.

ஏப்ரல் 17ம் திகதி கேட்டி ஹோப்கின்ஸ் என்ற சண் நாழிதழின் ஊடகவியலாளர் எழுதிய பத்தி பலர் மத்தியில் சண் மீதான அருவருபைத் தோற்றுவித்துள்ளது. ‘தமது நாடுகளில் மனித உரிமைப் பிரச்சனை என்று தப்பியோடிவரும் அகதிகள் கரப்பான்பூச்சிகளைப் போன்றவர்கள். அவர்கள் கரையேறுவதைத் தடுப்பதற்கு ஆயுதக் கப்பல்களை பிரித்தானிய அனுப்பவேண்டும்.’ என்று தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

லிபியாவிலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் மூழ்கி மரணித்த மனித அவலத்தின் பின்னர் சண் ஊடகவியலாளர் உமிழ்ந்த இந்த நச்சு வார்த்தைகள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

Exit mobile version