Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் சுயாட்சி அளிக்க வேண்டும்- டி.ராஜா. 370- வது பிரிவை பயன்படுத்த வேண்டும்- சி.பி.எம்


காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய போராட்டம் வலுத்து வரும் நிலையில் காங்கிரஸ், பிஜேபி போன்ற கட்சிகள் ஒத்தக் கருத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா காஷ்மீர் சுயாட்சி குறித்துப் பேசியுள்ளார்.பாதுகாப்புப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து குறைந்தபட்சம் ஸ்ரீநகருக்காவது விலக்கு அளிக்க வேண்டும். மாநிலத்துக்கு முழு சுயாட்சி அளிக்கப்பட வேண்டும். அதுடன் மாநிலத்தின் 3 பிரதேசங்களுக்கும் தனித்தனியாக சுயாட்சி அதிகாரம் அளிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றார்.

காஷ்மீர் ஆட்சியைக் கலைக்க வேண்டுமாம். -சிபி.எம்.


இந்தியாவில் மாநில அரசுகளின் உரிமைகளுக்கு மீது தொங்கவிடப்பட்டக் கத்திதான் இந்த 370-வது பிரிவு. நீண்டகாலமாக இந்த பிரிவை நோக்கும் கோரிக்கையை மாநிலக் கட்சிகள் முன் வைக்கின்ற நிலையில் காஷ்மீர் நிலமைகளை கட்டுப்படுத்த அசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதற்கு பதிலாக தீவிரமாக அமல்படுத்துவதான் பிரச்னைக்குத் தீர்வாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார். இதன் மூலம் காஷ்மீரில் உள்ள காங்கிரசின் எடுபிடி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்து அதனூடாக இராணுவ ஆட்சியை அமல் செய்யக் கோரியிருக்கிறார் யெச்சூரி.

Exit mobile version