Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி?

k-pதென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் இராணுவத் தளபதி கருணா, தனக்கும் பிரபகரனுக்கும் இடையிலான முரண்பாடு என்ன என்று தெரிவித்துள்ளார். கருணாவின் திடீர் இந்தியப் பிரசன்னம் இந்திய உளவுத்துறை மீண்டும் ஈழப் பிரச்சனையில் மீண்டும் தீவிர அக்கறைகொள்வதை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையை தயவு தாட்சணியமின்றிக் கூறுபோடும் ஏகாதிபத்தியங்களுக்கு மத்தியில் இந்தியா தனது பங்கை எதிர்பார்ப்பது கருணாவின் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கும் தனக்கும் இடையிலான முரண்பாடு நோர்வேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நோர்வே அமைச்சர் விதார் கல்சிசனின் தலைமையிலேயே பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், அதன் ஐந்தாவது கட்டத்தில் நோர்வே அரசு திட்டம் ஒன்றை முன்வைத்தாகக் குறிப்பிடுகிறர்.

அந்த அடிப்படையில் தமக்கு சமஷ்டியைக் கருத்தில் கொண்டு பேசுங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கு இணங்கி பாலசிங்கம் கையெழுத்திட்டதாகவும், அதன் பின்னர் அச் செய்தியை இலங்கைக்குக் கொண்டு சென்ற வேளை பிரபாகரன் தனது அனுமதியில்லாமல் முடிவெடுத்தமையை கண்டித்து மாத்தையாவிற்கு இணையான துரோகியாக கருணாவைச் குறித்துக்காட்டியமையால் தான் தனது பிரதேசத்திற்குத் திரும்பிச் சென்று பிரிந்து சென்றதாகக் கருணா கூறுகிறார்.

அது மட்டுமல்ல இன்று புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் உருத்திரகுமாரை நடந்தவற்றிற்குச் சாட்சியாக முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் நாடுகடந்த அரசாங்கத்தின் ஆயுள் காலப் பிரதமர்.

பாலசிங்கம் கையெழுத்திட்டமையால் கருணா துரோகியாக்கப்பட்டதாகக் கருணா கூறுகிறார்.

புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கமே பேச்சுவாத்தைக்குத் தலைமை தாங்கினார். அப்படியிருந்தும் கருணா-பிரபாகரன் பிளவு ஏற்பட்டதன் காரணம் என்ன. பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு கருணா இலங்கைக்குப் பயணமானதும் கருணா – பிரபாகரன் பிளவை ஏற்படுத்துவதற்கான சதி நடந்திருக்கிறதா? கருணா பிளவைத் தூண்டிய தமிழ் நெட்டின் முன்னை நாள் ஆசிரியர் சிவராமின் பங்கு என்ன?

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்கள் போல நாடகமடிப் புலிகளை அழித்த கூட்டம் கருணா இலங்கைக்குப் பயணமாகும் இடைவெளிக்குள் பிரபாகரனுக்குப் போட்டுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு புலிகளைப் பிளவுபடுத்தி அழித்தவர்கள் யார்?

கருணா இதற்கான சாட்சியாக உருத்திரகுமாரனை அழைத்துள்ளார். போராட்டத்தை ஏகபோக அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்து அழிப்பு நடத்திவிட்டு இன்றும் தமிழ்த் தேசியம் பேசும் பலரை அடையாளம் காட்ட உருத்திரகுமாருக்கு இது ஒரு சந்தர்ப்பம்.

Exit mobile version