Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நளினியை விடுதலை செய்ய முடியாது -ஜெயலலிதா அரசு, விக்னேஸ்வரன் எங்கே?

nalinilongநளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது. இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரினார்.அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நளினியை விடுவிக்க முடியாது. அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்று கூறியிருந்தது.

ஈழப் போராட்டத்தை மட்டுமன்றி தமிழக மக்களையும் குரூரமாக ஒடுக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சீ.வீ.விக்னேஸ்வரன் என்ற வட மாகாண சபை முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா முதமைச்சரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். தன்னைத் தேசிய வாதியாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீ.வீ.விக்னேஸ்வரன் எனற முன்னை நாள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தன்னை நிரூபித்துக்கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். ஜெயலலிதாவைச் சந்தித்து தனது தமிழ்த் தேசியப் பெருமைகளைக் கூறி நளினியை விடுதலை செயய விக்னேஸ்வரன் இப்போது கோரிக்கையை முன்வைத்து ஜெயலலிதாவிடமிருந்து பதில் பெற்றுக்கொள்ளாவிட்டால் விக்னேஸ்வரனின் முகத்திரை கிழிந்துவிடும்.

Exit mobile version