பிரித்தானியாவின் அடிப்படை அரசியல் அமைப்பின் பல கூறுகளை நிராகரிக்கும் கோபின் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அதிக வரி அறவிடவேண்டும் என்றும் வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள செல்வத்தை நாட்டிற்குக் மீட்டுவர வேண்டும் என்று கூறுகிறார்.
தொழிற்கட்சித் தலைமைக்கான ஜெரமி கோபினின் பிரச்சார நடவடிக்கைகளின் போதே அவருக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்களை பல்தேசிய ஊடகங்கள் மேற்கொண்டன. வெற்றியின் பின்னதாக அவசராமாக தலையங்கம் எழுதி பிரித்தானியாவின் வியாபாரத்திற்கான நாழிதழ் பைனான்சியல் ரைம்ஸ், ஜெரமி கோபினின் தெரிவு பிரித்தானியாவிற்குப் பேரழிவு எனக் கூறுகிறது.
கோபினுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்சியின் உள்ளேயும் வெளியேயும் இருந்து ஆரம்பிக்கப்படுவிட்டன.
தன்னை ஒரு மார்சிஸ்ட் என அறிமுகப் படுத்திக்க்கொண்டே வரலாறு காணாத வெற்றி பெற்ற கோபின், சிரியாவிலும், ஈராக்கிலும் விமானக் குண்டுகள் பொழிவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிறார்.
ஜெரமி கோபினின் இடதுசாரிக் கருத்துக்களுக்காக ரொனி பிளேர் அவரை அரசியலிலிருந்து ஒதுக்கினார். 32 வருடங்கள் பெரிதும் அறியப்படாத அரசியல்வாதியாகவிருந்த ஜெரமி கோபின் இன்று நாட்டின் ஒவ்வொரு அரசியல் வாதியையும் கிலி கொள்ளச் செய்துள்ளார். அவரே எதிர்பார்த்திராத வரலாற்று வெற்றி பிரித்தானிய வரலாற்றில் பதிவாகும்.