Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கம்யூனிசத்கிற்கும் கார்ல் மார்க்சிற்கும் பிரித்தனியாவில் முன்னெபோதும் இல்லாத ஆதரவு

ஜெரமி கோபின்
ஜெரமி கோபின்

பிரித்தானியாவில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி படு தோல்வியைத் தழுவியது. தொழிற்கட்சி பல்தேசிய பெரு வியாபார நிறுவனங்களுக்கு எதிரான கட்சி என்பதாலேயே தோல்வியைத் தழுவியதாக கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் செயலாளரும் பிரதமர் வேட்பாளருமான எட் மிலிபாண்ட் தோல்வியின் மறு நாளே கட்சியிலிருந்தும் செயலாளர் பதவியிலிருந்தும் விலகிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெற்றிடமான கட்சிச் செயளார் பதவிக்கு பல முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

கட்சியில் தீவிர இடதுசாரியாகவும் மார்சிஸ்ட் எனவும் அழைக்கப்படுபவருமான ஜெரமி கோபினின் பெயரும் வேட்பாளர்களுள் ஒருவராக முன்வைக்கப்பட்டது. கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள் அவரை ஆதரிக்கவில்லை. தீவிர இடதுசாரிக் கருத்துக்களால் ஜெரமி கோபின் கட்சிச் செயலாளராகும் வாய்ப்பில்லை என முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

பீபீசி நிகழ்ச்சியில் இரண்டு வாரங்க்ளுகு முன்னர் வழங்கிய நேர்காணலில் தான் ஒரு மார்க்சிஸ்ட் என்பதை மறுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இன்று பிரித்தானியாவிலுள்ள 152 தொகுதிகள் ஜெரமி கோபின் இன் தெரிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தவிர, பிரித்தானியாவின் பெரிய இரண்டு தொழிற்சங்கங்களும் அவருக்கே ஆதரவளிக்கின்றன.

கடந்த 20 வருடங்களாகக் கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக விமர்சித்துவந்த கோபின், பொதுத் துறையைத் தனியார் மயப்படுத்தலை ஆதரிக்கவில்லை; வங்கிகளின் தனியார்மயமாக்கலை எதிர்த்தார்; ஈராக் மீதான ஆக்கிரமிப்பு உட்பட நாடுகளின் மீதான தலையீடுகளை எதிர்த்தார்.

தன்னை இடதுசாரியாகவும் மார்சிஸ்டாகவும் அழைத்தார். பல்தேசிய பெரு வியாபார நிறுவனங்களுக்கு மிக நெருக்கமாகச் செயற்பட்டதாலேயே தொழிற்கட்சி தோல்வியடைந்தது என தோல்விக்குப் பின் கூறினார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக மார்க்சியத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிராக பாடசாலை நூல்களிலிருந்து ஊடகங்கள் வரை பிராச்சாரம் மேற்கொண்டுவந்தன. இன வெறியூட்டப்பட்டு மூளை கழுவப்பட்ட தமிழர்களையும் சிங்களவர்களையும் போன்று பெரும்பான்மையான பிரித்தானியர்கள் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலை அங்கீகரித்தனர்.

பல்தேசிய நிறுவனங்களும் ஆளும் வர்க்கங்களும் நடத்திய கொள்ளை பல வருடங்களின் பின்னர் மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளது.

கார்ல் மார்க்சின் தத்துவம் சரியானதும் தேவையானதும் எனக் கூறும் ஜெரமி கோபின், தாங்கள் அரசியல்வாதிகள் ஜனநாயக வழியிலேயே செயற்பட விரும்புகிறோம் என்கிறார்.

பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகின் எந்தப்பகுதிகளிலும் பாராளுமன்ற வழிமுறைகளின் ஊடாக சோசலிச அரசை அமைக்க முடியாது,

ஜெரமி கோபினினுக்குக் கிடைக்கும் ஆதரவும், கிரேக்கத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆதரவும் ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தின் இன்றைய வளர்ச்சியை உணர்த்துகிறது. பல்தேசிய ஊடகங்களதும் ஆளும்வர்க்கங்களதும் பிரச்சாரங்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையான உண்மையாகத் தெரிகின்றது. ஜெரமி கோபின் போன்றவர்கள் ஒரு இடைக்காலத் தெரிவு. திரிபுவாதிகள் தோல்வியடையும் போது மக்கள் புரட்சிக்கான பாதையை தெரிந்தெடுப்பார்கள்.

Exit mobile version