Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் பின்னர் அரச பயங்கரவாதிகளின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

state-terrorismமுதலாளித்துவ ஜனநாயகம் தன்னை எப்போது வேண்டுமனாலும் பாசிச அரசாக உருமாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு பிரான்சின் பிரான்சுவா ஒல்லோந்தின் சோசலிசக் கட்சியின் ஆட்சி சிறந்த முன்னுதாரணம். அமெரிக்க இரட்டக் கோபுரத் தாக்குதலின் பின்னர் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இராணுவத் தலையீடுகளும் இராணுவ அரசுகளையும் போன்று இன்று பாசிச அரசுகளைத் தோற்றுவிப்பதற்கு பிரான்ஸ் மையப்புள்ளியாக தோன்றியிருக்கிறது.
பிரான்சில் புதிய இராணுவச் சட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்ட ஏற்பாடுகளை பிரான்சுவா ஒல்லோந் அறிவித்துள்ளார். பிரான்சில் வாழும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாக அது அமைந்துள்ளது.

பிரான்சில் ஆரம்பிக்கும் ஐரோப்பிய பாசிச அரசின் தோற்றம் அந்த நாட்டிற்கானது மட்டுமல்ல. எதிர்கால ஐரோப்பாவின் குறுக்குவெட்டு முகமே இன்றைய பிரான்ஸ்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடுகளில் பிரான்சும் ஒன்று. சிரியாவில் மனிதகுலத்தின் ஒரு பகுதியை அழிப்பதற்கு பயங்கரவாதிகளைத் வளர்த்துவிட்ட பிரான்சின் ஜனாதிபதி ,

பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக சிரியா மாறிவிட்டதாக தனது பாராளுமன்ற உரையை ஆரம்பித்தார்.

பிரான்சில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதுமே முதலாளித்துவ அரசிற்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சுறையாடலுக்கும் எதிரான மக்களின் போராட்டங்கள் அதிகரித்திருந்தன. மீள முடியாத பொருளாதார நெருக்கடியை நோக்கி ஐரோப்பிய நாடுகள் நகர்ந்துகொண்டிருந்தன. மூலதனமும், பணமும் ஒரு சில பல்தேசிய மாபியா நிறுவனங்களின் கரங்களில் குவிக்கப்பட்டு உலகம் கொள்ளையிடப்பட்டது.

இந்த நிலையில் போராடுவதைத் தவிர மக்களுக்கு வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை.

அதனை எதிர்கொள்வதற்கும் தற்காலிகமாக மக்களின் போராட்டத்தைப் பின் போடுவதற்கும் முதலாளித்துவ அரசுகள் மக்களின் எதிர்ப்பின்றியே பாசிச அரச கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டதன் விளைவே பாரிஸ் தாக்குதல்கள். தமது அடியாள் படைகளைக் கொண்டே பிரான்சின் மீதும் அதன் மக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் புதிய போலிஸ் இராணுவச் சட்டங்களை பிராஞ்சு அரசு முன்வைத்துள்ளது.

முதலாளித்துவ அரசுகளைத் தோற்கடிப்பதற்கான மக்கள் எழுச்சிகள் தோன்றும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் இவ்வாறு அடிப்படை வாதத்தைத் தோற்றுவித்து மக்களின் சிந்தனையைத் திசை திருப்பி இராணு ஆட்சியை உருவாக்குவது வழமை. இலங்கை முழுவதும் சோசலிச எழுச்சிகள் தோன்றிய காலத்திலேயே பேரினவாதம் சிங்களை அரசுகளால் நடைமுறைக்கு வந்தது. அதன் மறுபக்கத்தில் தமிழ் இனவாதிகள் பேரினவாதத்தை வளர்க்க ஆரம்பித்தனர்.
வடக்கில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுத எழுச்சியாகவும் இடதுசாரி எழுச்சியாகவும் மாறிய போது தமிழரசுக் கட்சி பாராளுமன்றத்தில் வடக்கைக் காப்பாற்றுமாறு மன்றாடியது. யாழ்ப்பாணம் வியற்னாமாக மாறுகிறது என்று பாராளுமன்றத்தில் முறையிட்டது.

இதன் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் உள்ளடக்கத்தை இனவாதமாக மாற்றி இயக்கங்களுக்கு வழங்கப்பட்டது. சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம் என முழங்கிய தமிழ் இனவாதிகள் சிங்கள பேரினவாதப் பாசிஸ்டுக்களுடன் சோசலிசப் போராட்டங்களுக்கு எதிராகக் கைகோர்த்துக்கொண்டனர்.

இதே போன்று தான் பிரான்சின் இன்றைய நிலையும். தமது நெருக்கடிகளை எதிர்கொள்ள தம்மால் உருவாக்கப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதிகளை களத்தில் நுளைத்து பிரான்ஸ் நாட்டில் இரணுவ ஆட்சியை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
நாழிதழ்கள், வானொலி தொலைக்காட்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளை அரசு தான் விரும்பிய வகையில் எதிர்ப்புகளின்றி மேற்கொள்ளும் சட்டம் 1955 அவசரகால சரத்துக்களின் அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டிவரப்பட்டுள்ளது. அரசு விரும்பிய எவரையும் முன்னறிவிப்பு இன்றிக் கைது செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சு தேவை எனக் கருதினால் முன்னறிவிப்பின்றி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து தான் விரும்பிய பகுதியை இராணுவத்தினதும் போலிசினதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ நீதிமன்றத்திற்கான அதிகாரம் வாழங்கப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் எவரையும் வீட்டுக்காவலில் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரஞ்சு ஜனநாயகத்தின் முகமூடி கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகம் எப்போது வேண்டுமானாலும் பாசிச சர்வாதிகாரமாக மாறலாம் என்பதை இன்று மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

Exit mobile version