அவர் மேலும் தெரிவிக்கையில் , கட்சியென்ற ரீதியில் நாம் எதிர்பார்ப்பது தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் உட்பட, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் சமஷ்டி என்பதை தேசிய ஒற்றுமைக்கான தீர்வாக நாம் ஒரு போதும் எண்ணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமஷ்டி மக்களை தூரப்படுத்துமே தவிர இனங்களை அண்மைப்படுத்தாது என்றும் தமிழ், முஸ்லிம், மலையகம் உட்பட அனைத்து சமூகங்களுடைய பிரச்சினைக்கு தீர்வென்பது பிரிந்து செல்வதால் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமையைக் கொண்டுவருவதன் மூலமே அதை அடையமுடியும் என்று கூறிய அவர் தேசிய ஒற்றுமையை அடைய வேண்டுமானால் சம உரிமைகள் அனைத்து சமூகத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசனத்தின் வழி சம உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை என்பது மக்கள் கூட்டம் ஒன்றின் அடிப்படை ஜனநாயக உரிமை என மார்க்சியத்தின் அடிப்படைகள் கூறும் அதேவேளை தம்மை மார்க்சிஸ்டுக்கள் எனக் கூறும் ஜே.வி.பி யும், முன்னிலை சோசலிசக் கட்சியும் கூறுகின்றன.
தேசிய இனங்களில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றன பேரினவாதக் கட்சிகளே தவிர வேறில்லை.