ஸ்ரெலைட் ஆலை தூத்துக்குடியில் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
வருடாந்த பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆலை மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அனில் அக்ரவாலின் கொள்ளைக்கு துணைபோகும் எடப்பாடி அரசும் அவரின் போலிஸ் கிரிமினல்களும் மக்களை அச்சத்துள் வாழ நிர்பந்திக்கின்றனர்.
ஏற்கனவே அனில் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அக்கரவாலின் ஆணையை ஏற்று மத அடிப்படைவாத பாரதீய ஜனதா-ஆர்.எஸ்.எஸ் அரசு தனது அடியாள் அரசான தமிழக அரசின் ஊடாக நடத்திய மக்கள் மீதான பயங்கர்வாவாதக் கொலைகள் மீண்டும் தொடரும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
பாரதீய ஜனதா மற்றும் அதன் அடியாள் அரசின் கிரிமினல் நடவடிக்களைக்கு எதிராக மக்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
போராடும் மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் மக்கள் இணைந்து போராடத் தயாராக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தில் பல அரசியல்வாதிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் வேதாந்தாவின் பணம் வழங்கப்பட்டிருக்க வாய்புக்கள் உண்டு.
மக்களின் போராட்டத்தை, இனவாதத்தையும், மதவாதத்தையும் பயன்படுத்தித் திசைதிருப்ப முயன்றாலும் அத் தடைகள் அனைத்தையும் மீறி போராட்டம் தொடரும் என்பதில் மக்களும் அவர்களின் அரசியல் முன்னணிப் படைகளும் உறுதியுடன் இருப்பதாகத் தெரிகிறது.