Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அரச பயங்கரவாதம் தமிழ் நாட்டைக் குறிவைக்கிறது

தெற்காசியாவின் இன்றைய மிகபெரும் பயங்கரவாத வன்முறை அரசாகக் கருதப்படும் இந்திய மதவாத அரசு திரிபுரா மாநிலத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அங்கு நடத்திய பயங்கரவாதக் களியாட்டத்தில் லெனின் சிலையை உடைத்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திற்று. பின்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் அதன் தமிழ் நாட்டு கிளை பெரியார் சிலைகளை உடைக்கப்போவதாக அக் கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா சர்மா என்பவருக்கு ஊடாக அறிவித்தது. பின்னதாக மக்கள் ஒன்றிணைந்த குரலில் எதிர்புத் தெரிவித்ததும், தான் அக்கருத்தை நேரடியாக சமூகவலைத்த்ளத்தில் பதிவிடவில்லை எனத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா மற்றும் ஆ.எஸ்.எஸ் போன்ற மத அடிப்படைவாதிகளின் இக்கருத்தைத் தொடர்ந்து பெரியார் சிலையை உடைக்க முனைந்த பாரதீய ஜனதாக் கட்சியின் உறுப்பினர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் வேறுபாடுகளை களைந்து கொந்தளித்தது.

பெரியார் சிலைய உடைப்போம் என அதன் தலைமை பதிவிட, அதன் பிரமுகர்கள் அதனை உடைக்க முற்பட்டனர்.

பார்பனீயத்தின் மக்கள் மீதான தாக்குதலாகவே இச் சம்பவங்களை மக்கள் கருதும் நிலையில் அதன் அடையாளத்தின் சின்னமான பூனூலுடன் உலாவிய பார்பனர்கள் சிலரின் பூனுல் பொதுமக்கள் சிலரால் அறுக்கப்பட்டது.

பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தமிழ் நாட்டில் வன்முறையைத் தூண்டும் நோக்குடன் செயற்படுகின்றனர்.

பாரதீய ஜனதா பெரியாரையும் லெனினையும் அவமதிப்பது இது முதல் தடவை இல்லை என்ற போதும் சில ஊடகங்களும் பிரமுகர்களும் இக் கருத்து எச்.ராஜா என்ற பாரதீய ஜனதாவின் தேசியச் செயலாளரின் தனிப்பட்ட கருத்து எனக்கூறிவருவது அக்கட்சியைக் காப்பாறும் நோக்கத்திலா எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

Exit mobile version