இது தொடர்பாக இந்திய ரிசேர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது. இலங்கைப் பொருளாதாரத்தில் நேரடி ஆதிக்கத்தைச் செலுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்புக் குறித்து மூச்சுவிடுவதுகூடக் கிடையாது. தாம் பேசும் பேரினவாத அரசியலுக்குக் கூட பேரினவாதக் கட்சிகள் நேர்மையாக இருப்பதில்லை என்பதை இச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது. பேரினவாதம் என்பது அவர்களுக்கு வாக்குப் பொறுக்கும் ஆயுதம் மட்டுமே.
அதே வேளை யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தில் ஹிந்தி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹிந்தி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் திட்டமும் இந்தியத் தூதரகத்தால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது மனிதனின் அறிவுத்திறனை அதிகரிக்கும் என்பது விஞ்ஞானம். வடக்குத் தமிழர்கள் இன்னும் மொழிவாரியான ஒடுக்குமுறையச் சந்திக்கும் நிலையில் அறிமுகமற்ற ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
இது இந்திய அரசின் திட்டமிட்ட சுழ்ச்சியா என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று.
தீவிர இனவாதம் பேசும் தமிழ்க் கட்சிகள் இதனைக் கண்டுகொள்வதில்லை. . தாம் பேசும் இனவாத அரசியலுக்குக் கூட இனவாதக் கட்சிகள் நேர்மையாக இருப்பதில்லை என்பதை இச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது. இனவாதம் என்பது அவர்களுக்கு வாக்குப் பொறுக்கும் ஆயுதம் மட்டுமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) இந்திய அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பேச்சளவில் கூட கண்டிப்பதில்லை.