இந்தியத் துணைத் தூதுவரின் அனுசரணையுடன் சிறீலங்கா ரெலிகொம் நடத்திய நிகழ்வில் தென்னிந்திய சினிமா கலைஞர்கள் கலந்துகொண்ட நிகழ்வு, இந்திய அடியாளாக மாறிப்போன மு.திருநாவுக்கரசுவுவின் யாப்புத் தொடர்பான நூல் வெளியிடு ஆகியன இந்தியத் தலையீட்டின் நேரடியான குறியீடுகள்.
இந்தியா இராணுவத்தின் துணைப்படைத் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மற்றும் ஐங்கரநேசன், விக்னேஸ்வரன் கும்பலின் பரபப்பு அரசியல் நடவடிக்கைகள் இந்தியத் தலையீட்டின் மறைமுகமான குறியீடுகள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் துணையுடன் இந்தியத் துணைத் தூதரகம் நடத்தும் சீரழிப்பு நடவடிக்கைகள், அழிவுகளை நீண்டகாலத்திற்கு நிரந்தரமாக்கும்.
சினிமா பின்னணி இசைக் கலைஞர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் நேற்று யாழ்ப்பணத்தில் நடத்திய கலைக் கூத்த்து யாழ்ப்பாண மக்களுக்கு எந்தவகையிலும் தொடர்பற்றது.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு ‘மக்களே வாக்களியுங்கள்’ என்று உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்குப் பொறுக்கிகள் தயாராகிவிட்டனர்.
தென்னிந்தியாவிலிருந்து இக் கூத்தாடிகளின் களியாட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பும் கடைந்தெடுத்த இனவாதிகளைத் தவிர இதனை எதிர்க்க நம்மத்தியில் எவரும் இல்லை என்பது தான் இன்றைய அவலம்.