Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

IMF சுரண்டல் மையத்தின் தலைவராக ஒரு பெண்

ஏழை நாடுகளின் மக்கள் உழைப்பை வரிப்பணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ அறவிட்டு அமரிக்காவை மையப்படுத்திய பொருளாதாரச் சுரண்டலை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமான ஐ.எம்.எப் இன் புதிய தலைவர் ஒரு பெண்.
சர்வதேச நிதியத்தின் (IMF) தலைவராக பிரான்ஸ் நாட்டு பெண் அமை‌ச்ச‌ர் கிறிஸ்டின் லகார்‌ட் ஒருமனதாக தே‌ர்‌ந்தெ‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சர்வதேச நிதியத்தி‌ன் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பா‌லிய‌ல் புகாரில் சிக்கியதால், கடந்த மாதம் பதவி விலகியதை‌த் தொட‌ர்‌ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் சர்வதேச நிதியத்தின் 24 பேரைக் கொண்ட ஆட்சி மன்றக்குழு ஈடுபட்டது.

பிரான்ஸ் நாட்டு பெண் அமை‌ச்ச‌ர் கிறிஸ்டின் லகார்டும், மெக்சிகோ மத்திய வங்கி ஆளுந‌ர் அகஸ்டின் கர்ஸ்டன்சும் போட்டியிட்டனர். இருவரை பற்றிய விவரங்களை பரிசீலித்த பிறகு, கிறிஸ்டின் லகார்டை ஒருமனதாக தேர்வு செய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

55 வயதான லகார்ட், வரு‌ம் 5ஆ‌‌‌ம் தேதி பதவி ஏற்கிறார். அவர் 5 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் அமரும் முதலாவது பெண்மணி இவரே ஆவார்.

Exit mobile version