Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக தமிழர்களைத் திசைமாற்றும் தமிழ்வின் – ஐ.பி.சி?

Bheem Army Sena supporting Farmers during a protest against Farmer Bill at Gajipur Boder in New Delhi on November 29, 2020. (Photo: IANS)

இந்தியா முழுவதிலும் பல் தேசிய நிறுவனங்களின் கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இந்தியாவில் நடத்தப்படும் இத் திருட்டிற்குப் பின்னாலுள்ள அரசியல் கோட்பாடு 21ம் நூற்றாண்டின் அதிகாரவர்க்கத்திற்கு புதிய மாதிரியை வழங்கியுள்ளது, உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இக் கொள்ளை இந்திய அரசாலேயே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. முழு நாட்டினதும் ஒவ்வொரு அங்கமும், மக்களின் வாழ்வியலின் ஒவ்வொரு கணமும் கோப்ரட் கொள்ளைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இக் கொள்ளையின் பங்குதாரர்களாக உள்ளூர் பெரு முதலாளிகள் மட்டுமன்றி அரச அதிகாரமும் மாற்றமடைந்துள்ளது. இக் கொள்ளைக்கு எதிராக எழும் எதிர்ப்புக்குரல்கள் அனைத்தும் இக் கூட்டத்தின் இந்துத்துவ மதவெறியின் ஊடாக மடை மாற்றப்படுகிறது.

இந்தியாவின் பிரதான உற்பத்தியான விவசாயத்தையும் பல் தேசியக் நிறுவனங்களின் கொள்ளைக்கு திறந்துவிட்ட இந்திய அரசு போராடும் விவசாயிகளைத் தனிமைப்படுத்த முயல்கிறது. ஏனைய மானிலங்களிலிருந்து மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரள்வதைத் தடுக்க முயல்கிறது.

உலக வரலாற்றில் மிகப்பெரும் போராட்டமாகக் கருதப்படும் இந்த விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்களே அதிகம் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தின் பிரதான ஊடகங்கள் போராட்டத்தை இருட்டடுப்புச் செய்தாலும் தமிழகத்தில் இதற்கான ஆதரவு தினமும் பெருகிக்கொண்டே வருகிறது.

இந்த சூழலில் 17.12.2020 அன்று தமிழ் வின் என்ற ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் இணையத் தளம் இந்தியா இலங்கை மீது படையெடுத்து வடகிழக்கில் தமிழர்களைக் கொன்றொழித்த போது சீக்கியர்களே தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இன்றைய குறிப்பான சூழலில் இந்திய பாரதீய ஜனதாவின் காட்டுமிரண்டிக் கொள்ளை அரசிற்கு ஆதரவாக, சீக்கியர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட இக் காணொளி திட்டமிடப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது போன்ற தகவல்கள் இல்லை.
ஈழப் பிரச்சனை தொடர்பான கற்பனையான தவறான தகவல்களை பொதுப் புத்தியாக மாற்றிவிட்ட தமிழகத்தின் “தமிழ்த் தேசியம்” என்கிற அறிவியலுக்குப் புறம்பான அரசியல் என்பது ஐ.பி.சி இன் இக்கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு.

Exit mobile version