Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவத்தினரால் நாசப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் வீடுகள்

image (4)அரச அலுவல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மக்க்ள் குடியிருப்புக்கள் மீள ஒப்படைக்கப்படும் போது அதற்கான நட்ட ஈடு வழங்கப்படுவதுடன் அதனைக் கையேற்கும் போது காணப்பட்ட நிலையிலேயே அது ஒப்படைக்கப்படுவது வழமை. ‘நல்லாட்சி’ அரசின் ஆட்சியில் சில பகுதிகளில் வீடுகள் மீள ஒப்படைக்கப்படுகின்ற போதிலும் அவற்றிலிருந்து கதவுகள் மற்றும் யன்னல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அதே வேளை வீடுகள் சேதப்படுத்தப்பட்ட நிலையிலேயே விட்டுச் செல்லபடுகின்றன எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் அண்மையில் கைகளிக்கப்படுவதாகக் கூறப்பட்ட ஒரு பகுதி வீடுகள் முற்றாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. தவிர, அவ்வீடுகளில் உட்பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலகத்தின் அறிவித்தலும் காணப்படுகின்றது. கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீ தரன் உட்பட மாகணசபையினர் விடுவிக்கப்பட்ட வீடுகளின் சேதங்களுக்கான நட்ட ஈட்டையும் அதற்குரிய முன்னைய வாடகைத் தொகையையும் பெற்றுக்கொடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

குடியிருப்புக்கள் விடுவிக்கப்பட்டாலும் அவை மக்கள் மீள் குடியேறும் வகையில் கையளிக்கப்படுவதில்லை. இதுவரைகாலமும் இராணுவத்தினர் இலவசமாகக் குடியிருந்த வீடுகளை திருத்துவதற்கு நீண்ட காலமும், பெரும் தொகை முதலீடும் தேவைப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில வேளைகளில் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கு இது தெரியவந்தால் அமெரிக்காவிடம் நீதி பெற்று திருத்தவேலைகளை முடித்துத் தருவதாக அறிக்கைவிட்டாலும் வியப்படைவதற்கில்லை.

Exit mobile version