5:00 PM
8:00 PM
இலங்கைத் தேர்தலும் சமகால நிகழ்வும் பற்றிய கலந்துரையாடல் புதிய திசைகள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு புதிய திசைகள் அமைப்பினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இடம்: லூய்ஷம் சிவன் கோவில்
4a Clarendon Rise
SE13 5ES
காலம்: 13/03/2010
நேரம்: 5-8pm
டக்ளஸ் வென்றாலும் பரவாயில்லை, கூட்டமைப்பு வெல்லக்கூடாது என்கின்றது கஜேந்திரன் ஆதரவுக் குழு
[ சனிக்கிழமை, 13 மார்ச் 2010, 05:01.56 AM GMT +05:30 ]
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்ற கஜேந்திரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் கல்வியங்காட்டுப் பகுதிக்கு வெள்ளை வான் ஒன்றில் சென்ற கஜேந்திரன் ஆதரவாளர்கள் அங்கு மதில்களில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளம்பரச் சுவரொட்டிகளின் மீது தாம் கொண்டு சென்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் இது தொடர்பில் ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த குறிப்பிட்ட நபர்கள், ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வென்றாலும் பறவாய் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறக் கூடாது என்பதில் தாமும் தமது தலைமையும் தெளிவாக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அங்கு மக்கள் திரளவே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவத்தை பார்வையிட்ட முதியவர் ஒருவர் தமிழ் தேசியத்தை மாசுபடுத்த சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் வெற்றி அடைந்து வருவதாக தாம் கருதுவதாக கவலை வெளியிட்டார்.
குழி பறீக்கிற கூட்டத்திற்கும் குரல் கொடுக்க கூட்டம் இருக்கும் போது கஜேந்திரன் குழு இன்னும் பேசும் இதர்க்கு மேலும் பேசும்.என்ன செய்வது தமிழ் இனத்தில் சில பேர் கோடரிக்காம்பாய் இருந்து தமிழ் இனத்தின் முதுகில் குத்துகின்றனரே.
குறுந்தேசியவாதத்துக்கு இடமளிக்காது கடந்த கால அனுபவங்களை பட்டை தீட்டி மக்கள் போராட்டப்பாதையை முன்மொழியும் புதிய ஜனநாயக கட்சியின் கேத்தல் சின்னத்துக்கு வாக்களிப்பதனூடாக முதலாளித்துவ பாராளுமன்ற முறைக்கு பதிலாக மக்களின் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் புதிய ஜனநாயக புரட்சியை ஏற்படுத்த ஒரு ஆரம்ப புள்ளியை வைப்போம்