Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் நாளைக் கொண்டாடும் கும்பல்களின் பின்னணி : புதியவன்

maveerarஆயுதப்பற்றாக்குறைவினாலும் ஒன்பது நாடுகளின் இராணுவக் கூட்டாலுமே தாம் தோல்வி அடைந்ததாக கருதிக் கொள்ளும் எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு. விடுதலைப் புலிகளின் சக அமைப்புக்கள், கிளைகள், தனி நபர் விசுவாசிகள் என்று அனைத்து மட்டத்திலும் இயங்கிய நபர்கள், அமைப்புக்களே புலிகளின் தோல்வியை முதலில் திட்டவரைபுக்கு கொண்டுவந்தவர்கள்.

மேற்குலக நாடுகளிடம் சரணாகதி அடையும் மேட்டுமை மநோநிலை கொண்ட யாழ் மேலாதிக்க சிந்தனாவாதிகளான இவர்களும் இவர்கள் செயல்படுத்திய அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் பலமான அமைப்பாக இருப்பதை மட்டுமே தங்கள் நலனுக்குச் சாதகமாக கருதினார்கள்.

விடுதலைப் புலிகளின் பலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால் தாம் இரண்டாம் பட்சமாகிவிடுவார்கள் என்பதை உணரத் தொடங்கியதும், புலிகளை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கைப்பற்றுவதற்கான முதல் படியே இறுதி யுத்தம்.

இந்த யுத்தம் பல்லாயிரக் கணக்கான போராளிகளையும், அதன் தலைமையையும் கூடவே பெரும் தொகை மக்களையும் காவுகொடுக்கும் ஆனாலும அதன் மூலம் ஈட்டக் கூடிய லாபமே முதன்மையானது என்று முடிவு செய்தார்கள்.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலங்களை விட சமாதானக் காலமே ஒரு விடுதலை அமைப்பின் கட்டுமாணங்களை குலைக்கவும் அழிக்கவும் பலகீனப் படுத்தவும் உகந்த காலம் என்பதாலேயே நோர்வேயின் உதவியுடன் சமாதானத்தை கொண்டுவந்தனர்.

கருணாவினை பிரிக்கவும் ஆயுதக் கப்பல்களைத் தடுக்கவும் கேபி போன்றவர்களின் செயல்பாட்டை முடக்கவும் அத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மேற்கு உலக நாடுகளின் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்த இவர்கள் ஶ்ரீலங்கா அரசின் அதி உயர் வழங்கல்கள் பட்டியலில் சேர்ந்து கொண்டார்கள். மே 18 2009 ல் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிந்த கையோடு உலகத் தமிழ் பேரவை நாடுகடந்த தமிழீழம், தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று எஞ்சி இருந்த போராளிகளின் ஆத்திரம் போபத்தின் நிமித்தம் அவர்கள் ஒன்று சேர்ந்து அமைப்பாகி மீண்டும் தாக்குதல்களில்ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளாக தேர்வுசெய்து கொண்டனர்.

இன்னும் வெளிவர நிறைய உண்டு மக்களே. மாவீர்ர் நாளைக் கொண்டாடி பணம் திரட்ட திட்டமிடும் கும்பலில் பலர் இந்த அரச திட்டத்தின் நேரடிப் பிரதிநிதிகளே.

Exit mobile version