கடந்த 2ம் திகதி ஜூன் மாதம் இலங்கை அரசின் கடற்படைப் பிரிவு ஒன்றை சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலங்கை அரசு நகர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இந்திய அரசின் யுத்தக்கபலான ஐ.என்.எஸ் திரிகாந் இலங்கையை வந்தடைந்துள்ளது. நல்லிணக்க முயற்சியே இந்த நகர்விற்குக் காரணம் என இலங்கைக் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ள போதிலும், யுத்தம் தின்ற இலங்கையை மிண்டும் போர் மேகங்கள் சூழ்வதான அச்சம் தோன்றியுள்ளது.
தவிர, சில புலம்பெயர் குழுக்களின் உதவியுடன் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் சிறிய ஆயுத மோதல்களை இந்திய உளவுத்துறை தூண்டலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகியுள்ளன.
தமிழ் நாட்டைச் சூறையாட பல் தேசிய நிறுவனங்களை மக்கள் அனுமதிக்க மறுக்கும் சூழலில், இந்திய மதவாத அரசு ஒரு புறத்தில் வட பகுதியில் ஆயுத மோதல்களைத் தூண்டி ஈழ ஆதரவு வேடமிடத் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் எழும் அதே வேளை இலங்கை அரசை மிரட்டி சீன ஆதிக்கத்தை அகற்றுவதற்கும் இச் சமூக விரோத திட்டங்கள் பயன்படலாமா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
ஈழ ஆதரவு, சீனாவிற்கு எதிரான போர் என்பவற்றை எதிர்வரும் தேர்தலில் வெற்றிகொள்வதற்கான ஆயுதங்களாக இந்திய மதவாத அரசு பயன்படுத்தும் வாய்ப்புக்களை மறுக்க முடியாது.