எதிர்வீரசிங்கம் முன்னை நாள் வன்னி இராணுவத் தளபதியான ஆளுனரின் ஆலோசகர்.
எதிர்வீரசிங்கம் மட்டுமன்றி இலங்கை அரசோடு வர்க்க சமரச் அம் செய்துகொண்டவர்கள் பலர். பல்வேறு இயங்களாலும், பின்னதாகப் புலிகளாலும் தலைமைதாங்கப்பட்ட ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் ஆரம்பத்திலிருந்தே விதேசிய விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கு எதிரான விதேசிய சக்திகளின் அரசியல் குறித்து அறிந்திராத அப்பவிகள் ஆயிரக்கணக்கில் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இவர்களின் அளப்பரிய தியாகங்களை இழப்புக்களையும் பயன்படுத்திக்கொண்ட தேசிய வியாபாரிகள் இன்று ஒருவர் பின் ஒருவராக இலங்கை இனப்படுகொலை அரசோடு இணைந்து கொள்கின்றனர்.
தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய மாற்றத்திற்கான அரசியலை மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் முன்னணிப்படை முன்வைக்கும் போது இவர்கள் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள்.