கதிர்காமத்திலுள்ள கோத்தாபய ராஜபக்சவின் மாளிகை தொடர்பான தகவல்களைத் தொலைக்காட்சி ஒன்றில் விலாவாரியாகக் கூறிய இரண்டு பவுத்த பிக்குகள் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளனர்.
கதிர்காமத்திலுள்ள கிரிவிகாரையின் பிரதான மடாதிபதியான கோபவக்க தமிந்த என்ற பவுத்த பிக்குவே கோத்தாவின் கொலையாளிகளின் இலக்கிற்கு உட்படுத்தப்பட்டார். அவருடனிருந்த மற்றொடு பவுத்த துறவியும் படுகாயங்களுக்கு உள்ளாகினார்.
நேற்றய தினம் 12.06.2018 இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட இக் கொலைமுயற்சியின் பின்னர் கதிர்காமத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துறவி, பின்னதாக அம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆட்சியில் அமர்வதற்கு முன்பாகவே கொலைகளை ஆரம்பித்துவிட்ட கோத்தாபய மைத்திரி-ரனில் ஆட்சியின் பொருளாதாரச் சுமையால் விரக்தியுற்ற மக்களைப் பேரினவாத அரசியலால் வென்றெடுக்க முற்படுகிறார்.
தமிழர்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்காக தமிழ்-முஸ்லீம் வன்முறைகளைத் தூண்டும் முனைப்புகளையும் நாடு முழுவதும் காணக்கூடியதாக உள்ளது.
மறவன்புலவு சச்சிதானந்தத்தின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கோத்தாபய ஆரம்பித்த பொதுபல சேனா என்ற பவுத்த பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தமிழ் முஸ்லீம் வன்முறை ஒன்றைத் திட்டமிடுவதற்கான செயற்பாடுகளை வடக்குக் கிழக்கில் காணக்கூடியதாக உள்ளது.
கோத்தாவின் அரசியல் சூழ்ச்சி மற்றும் கொலை தொடர்பாக ‘நல்லாட்சி’ மூச்சுக்கூட விடவில்லை.