இலங்கையில் ஏற்படக்கூடிய அமெரிக்கா விரும்பாத ஆட்சி மாற்றத்தைத் தடுக்கும் வலிமை கோத்தாபயவிடம் மட்டுமே காணப்படுவதால் அமெரிக்காவின் ஆசியுடன் அந்த நாட்டின் இராணுவதால் பயிற்றுவிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இலங்கையின் பவுத்த பாசிச அமைப்பான பொதுபல சேனாவை உருவாக்கிய கோத்தாபய ராஜபக்ச அதன் பின்னணியிலும் செயற்பட்டார்.
மைத்திரி, ரனில் அதிகாரத்தைக் கையகப்படுத்திய
பின்னர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கோத்தாபய கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த அணியின் வெற்றிக்குப் பின்னர் நாடு திரும்பியிருந்தார்.
கோத்தாபய நாடு திரும்பியதும் முஸ்லீம்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இனப்படுகொலை உட்பட பல்வேறு கொலைகளுடனும் ஊழல் குற்றங்களுடனும் நேரடித் தொடர்புடைய கோத்தாபய ராஜபக்ச மீது இலங்கை அரசோ அன்றி அவர் வாழும் நாடான அமெரிக்காவின் அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.